Saturday, August 29, 2015
இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றபோதும்,
பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை நீக்க தேர்தல்கள்
திணைக்களத்திற்கு முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்
தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்தியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் இணைக்கப்பட்டபின் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை அல்லது வேறு காரணங்களின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நீதி விசாரணைகளின் பின் கிடைக்கப்பெறும் உத்தரவுக்கு அமைய, தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்தால் செயற்பட முடியும் எனவும் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment