Tuesday, August 25, 2015

மாலைதீவு ஜனாதிபதிக்கு மீண்டும் சிறை!

Tuesday, August 25, 2015
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாலைதீவு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், முகமது நஷீத். இவர், தனது பதவி காலத்தில் நீதிபதி ஒருவரை கைது செய்ததாக கூறி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் அவர் மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 19 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நஷீத்துக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு நஷீத்தை, வீட்டுக் காவலில் வைத்து சிகிச்சை அளிக்க கோர்ட் அனுமதித்தது. இந்த காலக்கெடு நேற்று  முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய வீட்டுக்காவலை நீக்கிய பொலிசார் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
 
நஷீத்தை மீண்டும் சிறையில் அடைத்ததற்கு அவருடைய மாலைதீவு ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. கோர்ட் உத்தரவு இல்லாமல் நஷீத் வீட்டின் முன்கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மிளகு ஸ்பிரேயை தெளித்து அவரை பொலிசார் இழுத்துச் சென்றுள்ளனர். இது கொடூரமான செயல், சட்டவிரோதமானது ஆகும் என்று அக்கட்சி கண்டித்து உள்ளது.

No comments:

Post a Comment