Tuesday, August 25, 2015

தேசிய பட்டியலால் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்புக்குள் வலுவடையும் முரண்பாடு!!

Tuesday, August 25, 2015
தமிழ்த்தேசிய (புலி)கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்தமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல எனவும் அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரன அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
எனினும் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு இலங்கை தமிழரசுக்கட்சி தமது விருப்பத்திற்கு அமைவாக இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அத்துடன் தம்மை தேசிய பட்டியலில் நியமிக்குமாறு முன்வைத்து இரு முக்கிய பேச்சுவார்ததைகள் இடம்பெற்ற போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக முடிவு மேற்கொள்ளபடவில்லையென அவர் தெரிவித்தார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு இலங்கை தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது,
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி தவிர்த்த ஏனைய கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல என தெரிவித்த அவர்,
எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் அதன் பயனை அடைவது ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல்.
எனினும் இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என குறிப்பிட்டார்.
 
குறித்த பிரச்சனை தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சிலதினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் மறுத்துள்ளார்.
 

மிகவும் ஆழமாக சிந்தித்து கலந்துரையாடிய பின்னரே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
 
சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒவ்வொரு இடங்கள் வழங்குவது என்றும் கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனவும் தீர்மானித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
 
குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே சாந்தி சிறீஸ்கந்தராஜா தோல்வியடைந்திருந்தார்.
யாழ் தேர்தல் மாவட்டத்தை விட வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்த அளவுக்கே கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
 
இதனால் அவர் நியமிக்கப்பட்டதாகவும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் மிகக் குறைவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதால் அப்பகுதிக்கு ஒரு இடம் வழங்கும் என முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆறாவது இடத்தை தவற விட்டவரை புறந்தள்ளி, அவருக்கும் குறைவான வாக்குகள் பெற்று சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இடமளிப்பது தவறானது எனவும் தேசியப் பட்டியல் நியமனங்கள் குறித்து கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார்.

3 comments: