Tuesday, August 25, 2015
2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி
முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம்
தீர்மானித்துள்ளது.
சம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் புலி அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 16 விமானங்கள் சேதமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவின் 14 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment