Saturday, August 29, 2015

தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள சமலும் விருப்பம்!

Saturday, August 29, 2015
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தேசிய அரசாங்
கத்துடன் இணைந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு இணங்கி தேசிய அரசாங்கத்தில் நானும் இணைந்து கொள்ளவுள்ளேன்.
 
அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதுவித தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக தேசிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்வதோடு, அரசியல் என்பது கொள்கை ரீதியானதாக இருந்தாலும் கட்சித் தலைவரின் முடிவுக்கு மதிப்பளித்து செயற்படவுள்ளேன்.
 
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இன்னும் எதுவித முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். அதே நேரம் ராஜபக்ச குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரப் போவதாகக் கூறியிருப்பது தொடர்பில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,
 
கட்சியில் தொடர்ந்தும் இருப்பதாயின் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு அமைய நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும். இந்த இரண்டு தெரிவுகள் மட்டுமே எமக்கு முன்னால் உள்ளது’ என அவர் கூறினார்.

No comments:

Post a Comment