Wednesday, August 26, 2015
அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப்
புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள
சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாக நடைபெறவுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு எல்லாளன் படை நடவடிக்கை மூலம் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தை விடுதலைப் புலிகள் தகர்த்தெறிந்திருந்தனர்.
இத்தாக்குதலின் போது 16 விமானப்படை விமானங்களும், 14 இராணுவத்தினரும் அழிக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார்,
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை சந்தேகத்தின்
பேரில் கைது செய்து வழக்குத் தொடுத்துள்ளனர்.
இதற்கென அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த வழக்கை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கில்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழக்கு தினமும் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கான உத்தரவை விசேட உயர்நீதிமன்ற நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment