Thursday, August 27, 2015

அமெரிக்காவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது: குணதாச அமரசேகர!

Thursday, August 27, 2015
அமெரிக்காவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
 
அவர், இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளார். அமெரிக்காவின் தேவைக்கு அமையவே இவ்வாறு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
 
இந்த தேசிய அரசாங்கம் எவ்வளவு செல்லுபடியாகும் என்ற கேள்வி எமக்குள் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளன.
 
எனினும் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ வாக்களிக்கவில்லை. ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குமே மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே, உண்மையில் ஒப்பந்தத்தில் இந்த இரண்டு தரப்பினருமே கையொப்பமிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.         

No comments:

Post a Comment