Sunday, August 30, 2015
எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ள நீர்காகம் கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான்பரப்பில் விமானங்கள் பறக்கக்கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லையென்று இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்று தெரிவித்தார்.
செப்டெம்பர் 3ஆம் திகதி நீர்காகம் கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது.
பயிற்சி நடக்கவுள்ள பிரதேசங்களில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லையென்றும் இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'நீர்காகம் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் முப்படைகளைச் சேர்ந்த 297 அதிகாரிகளும் 2232 வீரர்களும் ஈடுபடவுள்ளனர் என இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேசியா, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 53 அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.
இப்பயிற்சியின் இறுதிநாள் தாக்குதல் நடவடிக்கை ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரை பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தாக்குதல் பயிற்சிகளுக்காக எம்.ஐ. 17, லெ் 212 ஹெலிகொப்டர்கள், ஏ.என். 32 விமானம் கபீர் மற்றும் மிக் 27 தாக்குதல் விமானங்கள், மற்றும் கடற்படையின் விசேட தாக்குதல் படகுகள் என்பன பயன்படுத்தப்படவுள்ளன
No comments:
Post a Comment