Sunday, August 30, 2015
மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திணைக்களங்கள் அதனைப் பெறுபவர்களின் தராதரத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறவுள்ளவர்கள் அதனைப் பெறுவதற்கு ஏற்றதாகப் போக்குவரத்து விதிமுறை பற்றிய பூரண அறிவை பெற்றுள்ளாரா என்பதை அவதானித்து உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிப்பத்திரத்தை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடன் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் பின்புறமாக அமைந்துள்ள யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்றுப்பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.அதில் விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த அவரிடம் ஊடவியலாளர்கள் கருத்துக் கேட்டபோது நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், போக்குவரத்தில் பாதுகாப்புச் சம்பந்தமான நடவடிக்கைகளை அதிகரித்தால் விபத்துக்களைக் குறைக்க லாம்.நீதிமன்றங்களிலும் வேலைச்சுமை குறைவாக இருக்கும்.
நகரப்பகுதியில் குறைந்தது 40கிலோ மீற்றர் வேகத்துக்கு மேல் வாகனங்களையோ,மோட்டார் சைக்கிள்களையோ செலுத்தக்கூடாது.இவை தொடர்பில் நீதிமன்றங்களினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் ,பாடசாலையில் ஒழுக்கமாக இருப்பது போன்று வீதிகளிலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment