Thursday, August 27, 2015

இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முன் எடுக்கப்படுகின்றது: தினேஷ் குணவர்த்தன!

Thursday, August 27, 2015
இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முன் எடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் பங்காளி கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் பிரச்சினையேதும் இல்லை என குறிப்பிட்ட மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அமைச்சரவை ஸ்தாபிக்கப்படாமையினால் நாட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பெரும்பாலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு பற்றி இரு தரப்பினரும் கருத்து வௌியிட வேண்டும் ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே கருத்து வௌியிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
        

No comments:

Post a Comment