Monday, August 24, 2015
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு சாந்தி
ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் கதிர்காமதம்பி துரைரட்ணசிங்கம் ஆகியோர்
பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரினதும் பெயர்கள் இன்று தேர்தல்கள் அலுவலகத்திற்கு
கிடைத்ததாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட
வேட்பாளர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கதிர்காமதம்பி
துரைரட்ணசிங்கம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியலில்
பெயரிடப்பட்டுள்ளதா்கவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட்
குறிப்பிட்டுள்ளார்..
கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
இதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
சுரேஷ்பிரேமசந்திரனுக்கும், வினோநோகராத லிங்கத்துக்கும் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இந்த பட்டிய்ல தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment