Tuesday, January 31, 2012
புதுடெல்லி::பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த நிதியாண்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று கையெழுத்தாகும். முதல் கட்டமாக 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 118 வி்மானங்களை இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரித்து அளிக்கும்.
உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக மாறியுள்ள இதைப் பெற ரஷ்யாவின் மிக்-35, லாக்கீட் மாட்டினின் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரிப்பன், ஐரோப்பிய போர் விமானமான டைபூன் மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரபேல் வென்றுள்ளது.
ஈரோபைட்டர் எனப்படும் டைபூன் போர் விமானத்தை ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த நான்கு நாடுகளின் அரசுகளும் இந்திய விமானப்படையின் ஒப்பந்தத்தைப் பெற கடுமையாக முயன்று வந்தன. அதேசமயம், டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானத்திற்கு பிரான்ஸ் அரசு தீவிர ஆதரவு தெரிவித்து செயல்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இறுதியாக இந்த இரண்டு நிறுவனங்களை மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தப் பரிசீலனையில் வைத்தது. இதில் டஸ்ஸால்ட் ரபேல் விமானங்களின் விலை டைபூனை விட குறைவாக இருந்ததாலும், அதன் துல்லியம் சிறப்பாக இருந்ததாலும், பிரான்ஸ் நிறுவனத்திற்கு தற்போது அடித்துள்ளது யோகம்.
மிராஜைத் தந்ததும் டஸ்ஸால்ட்தான்
இந்திய வி்மானப் படைக்கும், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம்தான் மிராஜ் 2000 விமானத்தை இந்தியாவுக்குக் கொடுத்தது. இந்தியாவின் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று மிராஜ்தா என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரும்போது இந்திய விமானப்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நிச்சயம் சீனாவுக்கு இது கசப்பான செய்திதான்..!