Tuesday, January 31, 2012
சென்னை::நடிகர் இடிச்சபுளி செல்வராஜ், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 72. காமெடி நடிகர் பாண்டுவின் அண்ணன், இடிச்சபுளி செல்வராஜ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜீத் உட்பட பல ஹீரோக்களுடன் இணைந்து, 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் பல படங்களில் இணைந்து நடித்தார். ‘இதயக்கனி’, எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். பாக்யராஜுடன் ‘எங்க சின்ன ராசா’, அஜீத்துடன் ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று காலை மூச்சுத்திணறலால் பெரிதும் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நடுவழியிலேயே மரணம் அடைந் தார். அவருக்கு செல்லம் மாள் என்ற மனைவியும், பசந்தி என்ற மகளும் உள்ளனர்.
சென்னை நந்தனம் சத்தியமூர்த்தி நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இடிச்சபுளி செல்வராஜின் உடலுக்கு, தமிழ்த் திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment