Tuesday, January 31, 2012
டெல்லி::தமிழத்தில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இது நீடித்தால் இன்னும் 45 வருடங்களுக்கு தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த சோனியா காந்தி குறித்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பின் வெளியீடு நடந்தது. இதில் கலந்து கொண்டு அய்யர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 1967-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர இயலவில்லை. அதற்குக் காரணம், கட்சித் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தயவு இன்றி வேறு எந்தக் கட்சியாலும் ஆட்சிக்கு வர முடியாது. அந்த நிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும்.
கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான இடைவெளி இனியும் நீடித்தால் அடுத்த நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குக் கூட தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் கலந்து கொண்டார்.

No comments:
Post a Comment