Tuesday, January 31, 2012
இலங்கை::முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளினதும் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
அரசியற் கட்சிகளால் முன்வைக்கப்படும் யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து தேர்தல்கள் ஆணையாளரினால் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையார் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment