Tuesday, January 31, 2012
இலங்கை::புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட எந்தவொரு இராணுவமேஜர் ஜெனரலும் அமெரிக்காவில் சாட்சியமளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டில் இலங்கையின் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்கசட்டத்தரணிகளிடம் நான்காம் ஈழப் போர் தொடர்பில் சாட்சியமளித்ததாக ஊடகங்களில்தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
யுத்தத்தில் ஈடுபட்ட சகல உயரதிகாரிகளும் இன்னமும் கடமையில்ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் எனவும்பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை முன்னிட்டு நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்கள் சூடுபிடிக்கக் கூடும் எனவும், இதனை அரசாங்கம் எதிர்பார்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இராணுவ ஜெனரல் யுத்தக் குற்றச் செயல்களை ஒப்புக்கொள்கின்றார் என்ற தலைப்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், சாட்சியமளித்த இராணுவ ஜெனரலின் பெயர்வெளியிடப்படவில்லை.
யுத்தம் இடம் பெற்ற போது கடமையாற்றிய சிலர் தண்டனை அடிப்படையில்பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் அவர்கள் எவருமே நேரடியாக யுத்தத்தில் ஈடுபடவில்லைஎன கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இனந்தெரியாத நபர் ஒருவரினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின்அடிப்படையில் நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிற்குலஞ்சம் வழங்கி, நாட்டுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்க அமெரிக்க முயற்சிசெய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment