Tuesday, January 31, 2012
இலங்கை::ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் என கூறிய இரண்டு சந்தேகநபர்கள் கல்கிரியாகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!
கொழும்பு கேசர் வீதியில் வர்த்தகர் ஒருவரின் பணத்தை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி குறித்த வர்த்தகர் மூன்றரைக் கோடி ரூபாவை கொழும்பு கோட்டையில் இருந்து, தெஹிவளை வரை கொண்டு சென்ற வேளையில் சந்தேகநபர்கள் பணத்தை கொள்ளையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளரான குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், வேனில் சென்ற சந்தேகநபர்கள் அவரை அச்சுறுத்தி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த முகாமையாளருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரையும் சந்தேகநபர்கள் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து, சந்தேகநபர்களை கண்டறிந்ததன் பின்னர், வெலிகம பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment