Tuesday, January 31, 2012
இலங்கை::திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களும் இடிந்தகரையைச் சேர்ந்த பெண்களும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
அதே நேரத்தில் கூடங்குளம் அணு உலையை உடனே செயல்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான ஒரு குழுவினரும் அங்கு வந்தனர்.
இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்தித்ததால் அங்கு தகராறு ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறில் தொடங்கிய மோதல் பின்னர் அடிதடி, வன்முறையாக மாறியது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வந்த வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. அவர்கள் மீது செருப்புளும் வீசப்பட்டன.
இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
தாக்குதலை நடத்தியோரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடங்குளம் போராட்டக் குழுவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இனி மத்திய அரசு அமைத்துள்ள குழுவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு வந்த எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டனர்.
இத்தாக்குதல் சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களில் பதற்றம் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment