Tuesday, January 31, 2012
இலங்கை::அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், அமைச்சர்ஜீ.எல்.பீரிஸை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கப்பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்த விஜயம் இடம்பெறும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணசபைத் தேர்தல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனைவிதித்தல், மனித உரிமை நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம்செலுத்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கஅமெரிக்காத் தீர்மானித்துள்ளது.
ஹிலரி கிளின்ரனின் அழைப்பு தொடர்பான கடிதம், ஏற்கனவே அமைச்சர்பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கநடவடிக்கைகளை ஏற்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக கிளின்ரனின் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்அதற்கு இந்தியாவும் ஆதரவளிக்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment