Monday, January 30, 2012
சென்னை::புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 20ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.
புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர்-(புலி)வைகோ, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தடையை விலக்க முடியாது, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வரும் 20ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment