
இலங்கை::ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன முன்னிலையில் குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பௌத்தலோக்க மாவத்தையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்த ஆறு கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment