Tuesday, January 31, 2012
சென்னை::வண்டலூர் அருகே ஏரியில் விழுந்து பயிற்சி விமானம் நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இன்று காலை 11 மணி அளவில் பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. மீட்பு பணிக்காக 2 ஹெலிகாப்டர்கள் 11.30 அளவில் வந்தது. பயிற்சி விமானத்தில் வந்த தீபக் என்ற விமானி படுகாயம் அடைந்தார். மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கூடுவாஞ்சேரி, ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் விரைந்து வந்தனர். இந்த சம்பவம் சுற்றுப்புற ஊர் மக்களுக்கு தெரிந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment