Wednesday, April 30, 2014
சென்னை::பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியாக செயல்பட்ட தீவிரவாதி, சென்னையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் விசாரித்ததில் சென்னையை குண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்தது. அவனிடம் இருந்து சேட்டிலைட் போன், இந்திய வரைபடம், அமெரிக்க டாலர், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து ஓட்டல் ஒன்றில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை::பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியாக செயல்பட்ட தீவிரவாதி, சென்னையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் விசாரித்ததில் சென்னையை குண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்தது. அவனிடம் இருந்து சேட்டிலைட் போன், இந்திய வரைபடம், அமெரிக்க டாலர், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து ஓட்டல் ஒன்றில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 24ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதையொட்டி, தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், உளவு பிரிவு, கியூ பிரிவு, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டு ஒருவன் பதுங்கி இருப்பதாகவும், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு பல இடங்களில் தேடி வந்தனர். சென்னை மண்ணடியில் நேற்று நள்ளிரவில் போலீசார் சாதாரண உடையில் சென்று சோதனையிட்ட போது, அந்த ஐஎஸ்ஐ உளவாளியை சுற்றி வளைத்தனர். எனினும், அவர்கள் வருவதை கண்டுபிடித்து விட்ட வாலிபர் ஆட்டோவில் ஏறி தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்ட போது, அந்த வாலிபர் சிக்கினார். அவரை போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்டவன் பெயர் முகமது ஜாகீர் உஷேன் (37). இலங்கை தமிழரான இவன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. இவர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பல முறை வந்து சென்றுள்ளான். இந்தியாவில் நேரடியாக நுழைய முடியாத தீவிரவாதிகள், இலங்கையில் ஏஜென்டுகளை அமர்த்திக் கொண்டு அங்கிருந்து இங்கு உளவு பார்த்துள்ளனர். இவர்கள் முகமது ஜாகீர் உஷேனையும் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டத்தை அரங்கேற்ற பயன்படுத்திஉள்ளனர்.இவன் சர்வதேச போலீசாரால் தேடப்படும் குற்றவாளி.
இவன் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு சேட்டிலைட் போனையும், இந்தியாவின் வரைபடங்கள், அமெரிக்க டாலர்கள், கள்ள நோட்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இவனிடம் போலீசார் விசாரித்ததில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குண்டு வைத்து தகர்க்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அரசுக்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்தது, கூட்டு சதியில் ஈடுபட்டது என்னும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எஜென்டு ஒருவன் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் சேர்க்க திட்டம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பிற்கு தமிழகத்தில் இருந்து ஆள் சேர்ப்பதற்காக ஜாகீர் உஷேன் முயற்சித்ததாகவும் பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளன. மேலும், இவன் பாகிஸ்தானின் உளவு படையான ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல்கள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளான். கடந்த 2 வாரத்திற்கு முன்புதான், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளான். இவனை பற்றிய அனைத்து தகவல்களையும் மத்திய உளவு அமைப்பு தமிழக போலீசாருக்கு தெரிவித்தது.ஜாகீர் உஷேனை கைது செய்தபோது, பாகிஸ்தான் அதிகாரி போல நடந்து கொண்டான். அவனிடம் வெடிகுண்டு சம்பந்தப்பட்ட சில தகவல்களும் கிடைத்துள்ளன. இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இவனிடம் போலீசார் பறிமுதல் செய்த செல்போன் மற்றும் டைரியில் பல தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன என்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டிருந்ததா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.