Tuesday, April 29, 2014

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வது தொடர்பான விசேட கூட்டம்!

Tuesday, April 29, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மீள்குடியேற்ற அமைச்சும் மூலம் இதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்டுவருகின்றார்.

இதன் கீழ் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களின் குடி நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பில் ஆராயும் உயர் மட்டக்கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது வவுணதீவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 100 மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றினை பெற்றுக்கொள்பவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்காக சுமார் 60 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் மீள்குடியேற்ற பகுதிகளில் நீர் தேவையுள்ள பகுதிகளில் உள்ள 200 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடி நீரைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

No comments:

Post a Comment