Wednesday, April 30, 2014
இலங்கை::கிழக்கு பாதுகாப்பு தலமையகத்தில் சிங்கள ஹிந்து புது வருட கொண்டாட்டங்களின் பின்னர் கிழக்கு வாழ் மக்களுக்கும் இராணுவத்திற்குமிடையிலான நல்லுறவினை மேம்படுத்தும் நோக்குடன் உலமா சபை தலைவர்களுக்கும் பாதுகாப்பு தலமையக அதிகாரிகளுக்குமிடையில் வெலிகந்த பாதுகாப்பு தலைமையகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி பேச்சுவார்தையொன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதேச வாழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கிழக்கு பிராந்திய தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ லால் பெரேரா அவரது அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாதுகாப்பு தலமையகத்தினால் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகல் போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment