Tuesday, April 29, 2014

இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான்- கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்தார்!

Tuesday, April 29, 2014
இலங்கை:சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸானுக்கும், கிழக்குமாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று (28.04.2014)  திங்கட்கிழமை காலை திருகோணாமலையிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
எமது நாட்டில் நடைபெறவுள்ள ஏ.எல்.எம்.றிஸான் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிஸான் முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
 
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவின் தலைமைத்துவத்தினையும், நேர்த்தியான சேவையினையும் பாராட்டி ஞாபகச் சின்னமொன்றை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் வழங்கி வைத்தார்.
 
இங்கு அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் கல்வி, உயர் கல்வி, சுயதொழில் போன்ற துறைகளின் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment