Wednesday, April 30, 2014

காங்கிரசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சீக்கிய கலவர வழக்கில் கோர்ட் உத்தரவு!

Wednesday, April 30, 2014
புதுடில்லி: சீக்கிய கலவர வழக்கில், காங்கிரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அமெரிக்க கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த 1984ல், பிரதமராக இருந்த இந்திரா, தன் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த கலவரத்தை, காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தூண்டி விட்டதாக, குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, டில்லி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களுக்கான அமைப்பு சார்பில், அங்குள்ள கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, காங்., கட்சி தலைவர்கள் தான் தூண்டி விட்டனர். இந்த கலவரத்தில் தொடர்புடையவர்களுக்கு, காங்., தலைவர் சோனியா, பதவி கொடுத்து பாதுகாக்கிறார். இது, மனித உரிமை மீறல் பிரச்னை. எனவே, இதுகுறித்து விசாரித்து, கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், காங்., தலைவர் சோனியாவுக்கு, ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி ராபர்ட் ஸ்வீட் தலைமையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், அமெரிக்காவில் நடக்கவில்லை. வேறொரு நாட்டில் நடந்த கலவரத்தை விசாரிப்பதற்கு, அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை' என கூறி, காங்கிரசுக்கு எதிரான வழக்கை, தள்ளுபடி செய்தார்.        

No comments:

Post a Comment