Wednesday, April 30, 2014
இலங்கை::பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
பாப்பாண்டவர் எதிர்வரும் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கை கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் அறிவித்துள்ளது.எனினும், திகதிகள் இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.இலங்கை விஜயத்தின் போது பாப்பாண்டவர் எங்கு விஜயம் செய்வார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மடு தேவாலயத்திற்கும், இடம்பெயர் மக்களை பார்வையிடவும் விஜயம் செய்வார் என்ற தகவல்களில் உண்மையில்லை என கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளையின், இலங்கையின் சகல கத்தோலிக்க பேராயர்களும் விரைவில் வத்திக்கான் சென்று, பாப்பாண்டவரை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இவ்வாறு பேராயர்கள், பப்பாண்டவரை சந்திப்பது மரபு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment