Wednesday, April 30, 2014
இலங்கை::ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு
இலங்கை::ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு
ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அரசாங்கம்
அறிவித்துள்ளது.
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் மொஹமட் பைசால் ராசீன் இதனைத்
தெரிவித்துள்ளார். ஈரானுடன் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை சார் உறவுகளை
மேம்படுத்திக் கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக
ராசீன் தெரிவித்துள்ளார்.
ஏனைய மத்திய கிழக்கு நாடுகளை விடவும் ஈரான் வித்தியாசமான கலாச்சாரத்தை
கொண்டது எனவும், வித்தியாசமான மக்கள் சமூகத்தைக் கொண்டது எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் திறந்த
மனதுடன் செயற்படுவதில்லை என்ற போதிலும், ஈரானிய மக்கள் திறந்த மனதுடன்
செயற்படக்கூடியவர்கள் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment