Wednesday, April 30, 2014

புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள்: தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்­புமே எதி­ராக செயற்­ப­டு­கின்­றார்கள்: சம்­பிக ரண­வக்க!

Wednesday, April 30, 2014
இலங்கை::புலி­களால் வன்­னி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் அவர்­க­ளது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். அது முஸ்­லிம்­களின் உரி­மை­யாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்­புமே இதற்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றார்கள் எனக் குற்­றஞ்­சாட்டும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக ரண­வக்க வன்­னியில் இந்­தியப் பிர­ஜைகள் ஒரு இலட்சம் பேர் பலாத்­கா­ர­மாக குடி­யேற்­றப்­பட்­டது போல் இன்றும் சட்­ட­வி­ரோ­த­மாக இங்கு வந்து தங்­கி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­களை குடி­யேற்­று­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களை பாது­காப்பு படை­யினர் தடுத்து நிறுத்த வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
இன்றும் சட்­ட­வி­ரோ­த­மாக இங்கு வந்து தங்­கி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­களை குடி­யேற்­று­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களை பாது­காப்பு படை­யினர் தடுத்து நிறுத்த வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­மை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக ரண­வக இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் வடக்­கி­லி­ருந்து புலிப் பயங்­க­ர­வா­தி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­பட வேண்­டி­ய­தோடு புத்­த­ளத்தில் 1981 க்கு முன்னர் காணப்­பட்­டதைப் போன்று குடிப் பரம்­பலை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இதுவே எமது கொள்­கை­யாகும். அத்­தோடு வில்­பத்து தேசிய வனாந்­த­ர­மென்­பது பாது­காக்­கப்­பட வேண்­டிய சொத்­தாகும். எனவே, இதனை அழித்து மக்­களை மீள் குடி­யேற்­று­வ­தையும் குடி­ம­னை­களை அமைப்­ப­தையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யாகும்.

அது மட்­டு­மன்றி தற்­போது வில்­பத்து வடக்கு மேற்கு பிர­தே­சங்­களில் சர­ணா­லயப் பகு­தி­களில் 43 குடும்­பங்கள் குடி­சைகள் அமைத்து வாழ்­கின்­றன. இது சட்ட விரோ­த­மான நட­வ­டிக்­கை­யாகும். வன­வள இலாகா மற்றும் மத்­திய சூழல் பாது­காப்பு அதி­கார சபையின் அனு­ம­தி­யின்றி வனங்­களை அழிக்க முடி­யாது. மக்கள் குடி­யே­றவும் முடி­யாது.

பயங்­க­ர­வா­தி­களால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­க­ளையும் யுத்­தத்தால் இடம்­பெ­யர்ந்த சிங்­க­ள­வர்­க­ளையும் மீள வடக்கில் குடி­யேற்ற விடாது தடுப்­ப­வர்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்பும் விக்­னேஸ்­வ­னு­மே­யாவர். எனவே, வில்­பத்து பிரச்­சினை தொடர்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­வ­ரென்ற கார­ணத்தால் அமைச்சர் ரிஷாத் பதி­யூதின் மீது விமர்­ச­னங்­களை முன் வைப்­பது பொருந்­தாத விட­ய­மாகும்.

அன்று  புலிப் பயங்­க­ர­வா­திகள் பலத்­துடன் இருந்த போது முஸ்லிம் மக்­களை காட்­டிக்­கொ­டுத்து பிர­பா­க­ர­னோடு உடன்­ப­டிக்கை செய்­தவர் தான் ஹக்கீம். எனவே முஸ்­லிம்­களை பற்றி பேசு­வ­தற்கு அவ­ருக்கு அதி­காரம் இல்லை.

1977 - 1981 ஆம் ஆண்­டு­களில் இலங்­கை­யி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­ப­ட­வி­ருந்த இந்­தியப் பிர­ஜைகள் வன்­னியில் குடி­யேற்­றப்­பட்­டனர். இன்றும் அதே போன்ற பிரச்­சினை தலை­தூக்­கி­யுள்­ளது. சுற்­றுலா விசாவில் இங்கு வரும் இந்­தி­யர்கள் பாகிஸ்­தா­னி­யர்கள் மாலை­தீவு நாட்­ட­வர்­களை நிரந்­த­ர­மாக குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் சூட்­சு­ம­மாக நடை­பெற்று வரு­கின்­றது. இது தொடர்­பாக பாது­காப்பு படை­யினர் விழிப்­பாக இருக்க வேண்டும்.
வெளி­நா­டுகள்

இந்­தியா பாகிஸ்தான் சவூதி டுபாய் என வெளி­நா­டு­களின் உத­வி­யுடன் வடக்கில் நிர்­மா­ணிக்­கப்­படும் வீடு­களை ஒரு குறிப்­பிட்ட இனத்­துக்கோ அல்­லது தமக்கு வேண்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கோ வழங்­கப்­ப­டு­வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் சிங்­கள தமிழ் முஸ்லிம் இனங்­களின் இன விகி­தா­சா­ரத்­திற்­க­மைய குடி­யேற்­றப்­பட வேண்டும். அத்­தோடு வடக்­கி­லி­ருந்து வந்து புத்­த­ளத்தில் வாழும் முஸ்­லிம்­களால் அங்கு 1980 இல் காணப்­பட்ட குடிப்­ப­ரம்­பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மன்னாருக்கு ஒரு சட்டம் கொழும்புக்கு ஒரு சட்டம் அமுலில் இருக்க முடியாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கை பூராவும் ஒரு சட்டம் தான் அமுலில் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment