Wednesday, April 30, 2014

விக்னேஸ்வரன் மீது அதிருப்தி கூட்டமைப்புக் கூட்டத்தில் தெரிவிப்பு:!

Wednesday, April 30, 2014
இலங்கை::வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள், நிர்வாகப் போக்குகள், அவரைச் சூழ இருப்போரின் செயற்பாடுகள் போன்றவை குறித்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து, காரசாரமாகக் கருத்து வெளியிட்டனர் எனத் தெரியவருகின்றது.
 
முதல்வரைச் சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ கூட முடியாமல் இருக்கின்றது என சில மூத்த தலைவர்கள் விசனத்துடன் குறிப்பிட்டனர். பொதுவாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்புணர்வு அந்தக் கூட்டத்தில் ஆரவாரமின்றி - ஆனால் தீவிரமாக - வெளிப்படுத்தப்பட்டதாகக் கூட்டத்தில் பங்குபற்றிய சில தலைவர்கள் தெரிவித்தனர். பட்டவர்த்தனமாக சில விடயங்கள் அடுக்கிப் பேசப்பட்டன என்றும் கூறப்பட்டது.
 
எனினும், கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அந்தப் பிரச்சினைக்கு அந்த மட்டத்தில் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார் என்றும் தெரியவந்தது. தவறுகள், அதிருப்திகள், புரிந்துணர்வின்மை, இருந்தால் அவற்றை நாம் முதலமைச்சருக்கு எடுத்துரைத்து நிலைமையைச் சீர்செய்து கொள்ளலாம். அதற்குத்தானே நாங்கள் எல்லோரும் இருக்கின்றோமே..

No comments:

Post a Comment