Wednesday, April 30, 2014
இலங்கை::சர்வதேசத்தின் அனுசரணையை பெற்று இலங்கைக்குள் பிரிவினையை ஏற்படுத்தலாம் என தமிழ் கூட்டமைப்பு கனவு காண்கின்றது. ஆனால், அதிகாரப்பகிர்விற்கு இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இலங்கை::சர்வதேசத்தின் அனுசரணையை பெற்று இலங்கைக்குள் பிரிவினையை ஏற்படுத்தலாம் என தமிழ் கூட்டமைப்பு கனவு காண்கின்றது. ஆனால், அதிகாரப்பகிர்விற்கு இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது மீண்டும் புலிகளை உருவாக்குவதற்கு சமனாகும். பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற வட மாகாண சபை தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வு என்பது மீண்டுமொரு பிரிவினைவாதப் போராட்டமேயாகும்.இலங்கையின் இனப்பிரச்சினையை தூண்டுவது சிங்களத் தரப்பினர் அல்ல தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமேயாகும். இன்று அவர்கள் தீர்வுக்காக குரல் கொடுப்பதைப் பார்த்து தமிழ் மக்கள் ஏமாந்து வாக்களிக்கின்றனர்.
உண்மையாகவே வடக்கு, கிழக்கை இணைத்து சமஷ்டி அரசியல் யாப்பொன்று கொண்டு வரப்படுமாயின் இறுதியில் மீண்டுமொரு இனப்பிரச்சினைக்கு தூண்டுகோலாக அமையும். இனப்பிரச்சினையினை மீண்டும் ஏற்படுத்தும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச சக்திகளை ஒன்றிணைத்து முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
கூட்டமைப்பினரதும் வடமாகாண முதலமைச்சரினதும் பகற் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. இவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற நாம் இடமளிக்கப் போவதுமில்லை.
அதேபோல் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி ஆசையில் புலம்பிக் கொண்டிருக்கின்றார். முதலமைச்சருக்கான அதிகாரங்கள் போதவில்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும். மேலும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி மீண்டும் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் செய்யக்கூடாது.
ஆரம்பத்தில் தவறிழைத்தமையின் காரணத்தினாலேயே விடுதலைப்புலிகள் தீவிரவாதம் உருவாக்கப்பட்டு பெரியதொரு போர் ஆரம்பமாகியது. ற்போது புனர்வாழ்வு பெற்றுள்ள புலி இயக்க உறுப்பினர்களை கண்காணிக்காது வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் முன்னதை விடவும் மோசமான வகையில் தமிழ் தீவிரவாதம் உருவாக்கப்படும்.
நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்பு அரசாங்கத்திடமே உள்ளது. மீண்டும் வடக்கில் ஆயுத போராட்டங்களையும் அப்பாவி பொது மக்கள் இறப்பதையும் அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதேபோல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை மீண்டும் குழப்பும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment