Tuesday, April 29, 2014
இலங்கை::மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா - சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்படவேண்டும் என நான் எண்ணுகின்றேன்' என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சரை இங்குள்ளவர்கள் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றனர். அவரது செயற்பாடுகளை குழப்புகின்றனர் எனக் கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண சபையில் உள்ளதை ஒழுங்காக செய்த பின்னர் தொடர்ந்து இல்லாது பற்றி கதைப்போம். அதற்கு நாங்களும் ஆதரவு தருவோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்வது, தொடர்பில் எதிர்க்கட்சியினராகிய நாங்களும் ஆதரவு தருவோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கின்ற போதும், வடமாகாண சபையில் இருந்து செல்கின்ற கடிதங்கள் ஆங்கிலத்திலேயே செல்கின்றன.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் தறுதலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். அது தவறானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய நாம் தொண்டர் ஆசிரியர்களை அவர்களின் தகைமைக்கேற்பவே நியமித்தோம்' எனவும் தெரிவித்தார்.
இதன்போது, குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஏன் அதனை தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் என்று சொல்கின்றீர்கள்? ஏனைய ஆசிரியர்கள் நியமனங்களிலும் அவ்வாறான நியமனங்கள் அமையப்பெற்றன எனச் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment