Friday, May 31, 2013

தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம்!

Friday, May 31, 2013
இலங்கை::தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கெண்டுள்ளார்.
 
சுற்றுலா வர்த்தகம் நிர்மாணத்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதே இந்த விஐயத்தின் நோக்கம் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விஐயத்தின் போது தாய்லந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
 
அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கண்டிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் சமய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
கு
றிப்பாக சியம் மாக பீடத்தின் 260 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
 
நாளை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் மாலைத்தீவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு  குறிப்பிட்டுள்ளது.

ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்!

Friday, May 31, 2013
இலங்கை::ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஊடக ஒழுக்கக் கோவை பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
உத்தேச வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரிடமும் இது குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக சில ஊடகங்களின் செயற்பாடுகள் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.
 
எனவே இவ்வாறான ஒழுக்கக் கோவையொன்றை வகுப்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படக் கூடிய வகையில் ஊடகங்கள் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் நிலை­யத்­தில் பிச்சையெடுப்பவரின் 2 மணித்தியால வருமானம் 4800 ரூபா!

Friday, May 31, 2013
இலங்கை::கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடை­களில் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்ட யாசகப் பெண் இரண்டு மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்குள் பிச்­சை­யெ­டுத்து வரு­மா­ன­மாக 4800 ரூபா பெற்­ற­தாக கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோட்டை ரயில் நிலை­யத்­துக்குள் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த ஒரு பெண் உட்­பட நால்வர் ரயில்வே பாது­காப்பு ஊழி­யர்­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதில் பிச்­சை­யெ­டுத்த பெண்­ணொ­ருவர் காலை 7.00 மணி முதல் 9.00 மணி­வ­ரை­யி­லான இரண்டு மணித்­தி­யா­லங்­களில் 4800 ரூபாவை வரு­மா­ன­மாகப் பெற்­ற­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
கோட்டை  நீதி­மன்ற நீதிவான் திலின கமகே இந்த  நால்வரையும்  கடுமையாக  எச்சரித்து விடுதலை செய்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை!

Friday, May 31, 2013
சென்னை::இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 மதுரையில் இருந்து, அனுராதபுரம் வரையில், கடல் மார்க்கமாக மின்சாரத்தை பரிமாற்றும் திட்டம் ஒன்று, கடந்த 2007- 2008ம் ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக்கப்பட்டது.
 
இந்த திட்டத்தின் கீழ், 285 கிலோமீற்றர் நீலமான மின்சார தந்தி மூலம், 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பரிமாற்ற எதிர்பர்க்கப்பட்டிருந்தது.
 
எனினும், இந்த தந்தியின் நீலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளால் பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.
 
இந்த வேலைத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, இதுவே காரணமாக இருப்பதாகவும் குறித்த வேலைத்திட்டத்துக்கு பொறுப்பான இந்திய நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது!

Friday, May 31, 2013
இலங்கை::யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.
 
மனித உரிமைகள் பேரவையின், நீதிமுறையற்ற கொலைகள் மற்றும் உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உள்ளானோர் தொடர்பான விசேட செயற்பாட்டாளர்களை சந்தித்த இலங்கையின் பிரதிநிதிகள் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
 
இந்த குழுவினரால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதத்தடன், இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ளன.
 
கடந்த 30 வருடங்களில் இடம்பெயர்ந்திருந்த, 2லட்சத்து 27 ஆயிரத்து 44 குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 67 ஆயிரத்து 231 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அந்த குழு தெரிவித்துள்ளது.
 
அத்துடன் இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 2 லட்சத்து 95 ஆயிரத்து 873 பேரும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிக்கு தடை : சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்!

asianathletics-300Friday, May 31, 2013
சென்னை::இலங்கை வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இதன் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
ஆசிய தடகளப் போட்டி ஜூலை மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று ஆசிய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறும்போது இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலிலிதா வலியுறுத்தினார்.
 
ஆனால் இதனை ஏற்க ஆசிய தடகள சம்மேளனம் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, தடகளப் போட்டி சென்னையில் நடத்துவதற்கு அனுமதிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
 
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் சென்னைக்கு பதிலாக புனேவில் ஆசிய தடகளப் போட்டி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிச் சந்தேக நபர்கள் 10 பேர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுதலை!

Friday, May 31, 2013
பெங்களூர்::புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலைச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
 
குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.
 
இந்த சந்தேநபர்கள் 10 பேரும் 2002 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
 
அத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது!

Friday, May 31, 2013
இலங்கை::இலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக  புலிகள் இயக்க முன்னாள் உ
றுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, இலங்கை விமானப்படையின் அன்ரனோவ் - 32 விமானத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவத்தில் 32 இலங்கை படையினர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, இந்த விமாணம் தொழில்நுட்பக் கோளாறினால், வீழ்ந்து நொருங்கியதாக இலங்கை விமானப்படை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
 
எனினும், தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இந்த விமானத்தை புலிகள் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியதாக தெரியவந்தது.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை!

Friday, May 31, 2013
ஸ்காபரோ::கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில்
தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
 
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார்.
 
நேற்றுமாலை 3 மணியளவில் தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
 
இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர்.
 
அவரது தனது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடியுள்ளார்.
இவர் இலக்கு வைத்தே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு காணொலிப் பதிவு கருவிகளில் கொலையாளிகள் மூவரும் பதிவாகியுள்ளனர்.
 
அவர்களின் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுடைய தொகுதி என்பதுடன் அண்மைகாலமாக இப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்து காணப்டுகின்றது. கடந்த ஏப்ரல் 25 ம் திகதியன்றும் நேற்றுமாலை கொலை நடந்த இடத்தில இருந்து 200 மீட்டர் தொலைவில் இன்னொரு நபர் கொல்லப்பட்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Friday, May 31, 2013
இலங்கை::எனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
 
அந்த பல சேனா, இந்த பல சேனா என எந்த பலசேனா வந்தாலும் எம்மைப் போன்ற மனிதர்களை கீழே தள்ள முடியாது.
கௌதம புத்தரின் தத்துவங்களில் எந்த இடத்திலும் சிங்கள பௌத்தம் பற்றி வலியுறுத்தியதில்லை.
 
கௌதம புத்தர் ஜாதி என்பது எதுவென்பதனை தெளிவாக விளக்கியுள்ளார்.
உண்மையில் ஜாதி என்பது மனித ஜாதியையே குறிக்கும் என கௌதம புத்தர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.
 
பௌத்த தர்மத்தில் எந்தவொரு இடத்திலும் பிக்குகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.
பொலிஸாருடன் அடித்துக் கொள்ளுமாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
 
வீதிகளில் இறங்கி கொலை செய், கொடு, வெட்டுவேன் என கோசமிடுமாறு பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்படவில்லை.
 
உலகின் பல நாடுகளில் மதங்களுக்கு இடையில் வாதங்கள் நடைபெற்றன.
எனினும், அவை கை கால்களைப் பயன்படுத்தி நடத்தப்படவில்லை அவை, புத்தியூடாக நடத்தப்பட்டது என அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பேருவள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!

Friday, May 31, 2013
இலங்கை::ஐக்கிய இபுலிலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!
 
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது என தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்ற நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக்  (புலி)
 
 
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குவாத பௌத்த பெரும்பான்மைவாதம் மேலோங்கியுள்ள தற்கால சூழ்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின்வெது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச தீர்வுத் திட்டம் தொடர்பிலான தமது கட்சி நிலைபாடு விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையிலும் அதற்கான பதில் எதனையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற வேண்டுமாயின் படையினரை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வந்த போதிலும், இதில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு பகுதியில் அடையாள மிதவைகள் மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை!

Friday, May 31, 2013
ராமேஸ்வரம்::கச்சத்தீவு கடல் பகுதியில் அடையாள மிதவைகளை போட்டுள்ள இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மீன்பிடி தடை நாட்டுப்படகு மீனவர்களுக்கு கிடையாது என்பதால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தடை காலத்திலும் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் இதுவரை எந்த தொல்லையும் இன்றி மீன் பிடித்து வந்துள்ளனர். கச்சத்தீவில் 2, 3 நாட்கள் வரை தங்கி இருந்தும் மீன்பிடித்து வந்தனர். ரோந்து வரும் இலங்கை கடற்படையினரும் இவர்களை சோதனை செய்வதுடன், வேறு தொல்லை கொடுக்காமல் சென்று விடுவர். இதனால் கடந்த 45 நாட்களும் பிரச்னை இல்லாமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

மீன்பிடி தடைகாலம் முடிந்ததால் நாளை (ஜூன் 1) முதல் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை மன்னாரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்திய இலங்கை மீனவர் சங்கத்தினர், மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்படை முகாமில் அதிகாரிகளை சந்தித்து, ‘இந்திய மீனவர்கள் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் தங்களது மீன்பிடி சாதனங்கள் சேதமடைகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்‘ என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தற்போது கச்சத்தீவை சுற்றி 4 முனைகளிலும் இலங்கை கடற்படையினர் புதிதாக அடையாள மிதவைகளை மிதக்க விட்டுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெரிய கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகளில் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களை இனிமேல் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இந்த திடீர் நடவடிக்கை ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணிராயப்பன், மகத்துவம், ஜேம்ஸ் ஆகியோர் கூறுகையில், “தங்கச்சிமடத்திலிருந்து 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றோம்.

நேற்று முன்தினம் காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்திற்கு மாறாக 5 பெரிய இலங்கை கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வந்தன. பல ரோந்து படகுகளும் உடன் வந்தன. எங்கள் படகுகளுக்கு  அருகே ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்க வருவதால், இனிமேல் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். இன்று மட்டும் மீன்பிடித்துச் செல்லுங்கள். இனிமேல் இப்பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்தனர். இதனால் நாங்கள் கரை திரும்பி விட்டோம்’’ என்றனர்.

1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்திருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது!

Friday, May 31, 2013
இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்
வகையில், தேர்தல் சட்ட மூலத்தில் அரசாங்கம் மாற்றங்களை செய்யவுள்ளது.
 
அதன்படி 1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்திருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
 
இந்த சட்ட மூலம் எதிர்வரும் ஜுன் மாதம் 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில், வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெராதவர்களுக்கு, மேலதிக வாக்காளர் பெயர் பட்டியல் ஒன்றின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை 13ம் திருத்த சட்டம் குறித்து நாட்டில் உள்ள பொது மக்களை தெளிவுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டுள்ளது.
 
இந்த வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி முதல், 12ம் திகதி வரையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவிருப்பதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்பலகமத்தின் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்புக் கடவைகள் அமைத்துத்தருமாறு கோரிக்கை!.

Friday, May 31, 2013
இலங்கை::தம்பலகமத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை காரணமாக உயிர் ஆபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் இதனால் பாதுகாப்புக் கடவை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
குறிப்பாக சிராஜ் நகர், அரபா நகர், 95ம் கட்டை ஆகிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிக் கடவைகள் பேராபத்துமிக்கவையாக உள்ளன.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ள போதும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
பொது மக்களின் போக்குவரத்து நலனைக் கருத்திற்கொண்டு மிகவிரைவில் பாதுகாப்புக் கடவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, இதற்கு பிரதேச சபை பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, "சாண்ட்விட்ச்': வீச்சு!! Second sandwich hurled at: PM Julia Gillard!

Friday, May 31, 2013
மெல்போர்ன்::ஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, "சாண்ட்விட்ச்' வீசப்பட்டது. ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு. கடந்த இரண்டு வாரங்களில் அவர் மீது, இரண்டாவது முறையாக, சாண்ட்விட்ச் வீசப்பட்டுள்ளது.
 
பிரிஸ்பேன் நகரில் உள்ள பள்ளியில், 10 நாட்களுக்கு முன், 16 வயது மாணவன், ஜூலியா மீது சாண்ட்விட்சை வீசினான். இதற்காக, அவன் பள்ளியில் இருந்து, 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
 
இதற்கிடையே, கான்பெர்ரா நகரில் உள்ள பள்ளியில், நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஜூலியா மீது, மற்றொரு மாணவன், சாண்ட்விட்ச் வீசினான். அது, அவர் தலைக்கு மேலாக சென்று, அவரது காலடியில் வந்து விழுந்தது. இதை பார்த்த ஜூலியா பலமாக சிரித்து, ""நான் பசியாக உள்ளதை அறிந்து, இந்த சாண்ட்விட்ச் வீசப்பட்டதாக நினைக்கிறேன்,'' என்றார்.
 
Second sandwich hurled at: PM Julia Gillard!

Prime Minister Gillard has had another sandwich thrown at her during a school visit to Lyneham High school in Canberra.
Prime Minister Julia Gillard might be feeling a little crusty this afternoon after a second sandwich was thrown at her during a school visit.
The PM was mobbed by students at Lyneham High School to announce the ACT government has signed up to her Gonski school reforms.
The sandwich, thought to be salami on white bread, was hurled at the PM as she visited a Canberra school just before big lunch this afternoon.
It's believed the sandwich made contact with the PM, brushing her on the back and landing at her feet.
"They must have thought I was hungry," Ms Gillard said...
 
Exhibiting the steely determination that has been a hallmark of her time in The Lodge, Ms Gillard brushed off the incident to complete a press conference, and question and answer session with the students.
Earlier this month a student threw a Vegemite sandwich at the PM as she visited Marsden High school near Logan in South-east Queensland.
Kyle Thomson, 16, was suspended over the incident despite his insistence he had been wrongly accused. Kyle claimed he had tried to knock the sandwich from another student's hand.

கொழும்பில் தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் இறைச்சிக்கடைகள்!

Friday, May 31, 2013
இலங்கை::வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மாடுகளைக் கொல்வதற்காக தீ பற்றி கொல்லப்பட்ட பௌத்த பிக்குவிற்கு அனுதாப அலைகள் இன்னும் தலைநகரில் இருப்பதாலும், திறைமறைவில் அழுத்தங்கள் இருப்பதாலும், இறைச்சி வியாபாரிகள் தங்களது கடைகளைத் திறப்பதற்கு தயங்கி வருகின்றனர்.
 
வெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த சகல இறைச்சிக் கடைகளும் இன்று திறப்பதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கி இருந்தது. எனினும் வழமையான இறைச்சிக்கடைகள் திறக்கப்படவில்லை.
 
இறைச்சிக் கடைகள் திறக்கப்படாததற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு பொரளைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற   ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பதாக  கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது!

Friday, May 31, 2013
இலங்கை::வடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடமாடும் சேவைகளை ஒழுங்கு செய்திருப்பதாக, தெரிவிககப்படுகிறது.
 
இதன்படி எதிர்வரும் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், 5 ஆம் திகதி காரைநகரிலும், 6ஆம், 7ஆம் திகதிகளில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளன.
 
இதேபோன்று வடமாகாணத்தின் ஏனைய பகுதிளிலும் இந்த நடமாடும் சேவைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்மோகன் வருகையால் உறவு மேம்படும்: தாய்லாந்து!


Friday, May 31, 2013
பாங்காக்::மன்மோகன்சிங் வருகையால் இருதரப்பு உறவு மேம்படும் என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மன்மோகன்சிங் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஒருநாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
தாய்லாந்தின் மேற்கத்திய நாடுகளைப் பாருங்கள் கொள்கை மற்றும் கிழக்கு பார்வை கொள்கை காரணமாக  இரு நாடுகளைச் சேர்ந்த  உயர்நிலைக் குழுக்கள் அடிக்கடி பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாலும், இந்தியாவுடன் உள்ள உறவு வலுத்து வருகிறது.  அந்த வகையில் மன்மோகன்சிங் வருகை மூலம் இந்த உறவு மேலும் வலுப்பெறும்.
இந்த பயணத்தின்போது, வின்வெளி ஆய்வு, தகவல் தொழில் நுட்பம் கல்வி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனையை தடுப்பதற்காக நிதி புலனாய்வு அமைப்பு நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தவிர இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மரை உள்ளடக்கிய முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேலும் சில விஷயங்கள் குறித்தும், மன்மோகன்சிங்குடன் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஆலோசனை நடத்துவார் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பிரதமர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.

வடக்கில் காணி சுவீகரிப்பு வழக்கு: பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

Friday, May 31, 2013
இலங்கை::வடக்கில் மக்களுக்கு சொந்தமான ஆறாயிரத்து 381 ஏக்கர் காணி அரசாங்கத்தால சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களின் பிரதிவாதிகளை ஜூலை10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பான இந்த காணியை அரசாங்கம் சுவீகரிக்க முயல்வதாக தெரிவித்து இரண்டாயிரத்து 176 பேர் இந்த இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
 
குறித்த இரண்டு மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் S.ஸ்கந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்களில் யாழ் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர், காணிமற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன்,யாழ் மாவட்ட நில அளவையாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
பொதுத் தேவைக்கு எனத் தெரிவித்து கைப்பற்றப்படவுள்ள இந்தக் காணிகளில் பூர்வீகமாக தாம் வசித்து வந்ததாகவும் இவற்றை அரசாங்கம் சுவீகரிக்கும் பட்சத்தில் தாம் நிர்க்கதிக்குள்ளாவதாகவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
வலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான
ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிரதிவாதிகளின்  இந்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான மனுக்கள் மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேன்முறையீடு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் தீர்ப்பு வழங்குவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா சாமிதரிசனம்!

Friday, May 31, 2013
திருச்சி::ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் ஜூன் 3ந்தேதி வருவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனிடையே குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சுக்ரனின் அம்சமான ரங்கநாதரை சேவிப்பதற்காக ஜெயலலிதா நேற்று மாலை ஸ்ரீரங்கம் வருகை வந்தார்.

எண் கணிதப்படி குருப்பெயர்ச்சி 28ந்தேதி குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. பஞ்சாங்கப்படி 30ந்தேதிதான் குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால் குருப்பெயர்ச்சியும், குருவாரம் என்றழைக்கப்படும் வியாழக்கிழமையும் ஒரு சேர வருவதாலும், இந்த குருப்பெயர்ச்சியால் ஜெயலலிதாவின் சிம்மராசி, மகம் நச்சத்திரத்திற்கு சிறப்பான யோகங்கள் கூடி வருவதால் அன்றையதினம் சுக்ரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவித்தால் சகல நன்மைகளும், சிறப்புக்களும் கிடைக்கும் என்பதால் முதல்வர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை புரிந்ததாக கோவில் சார்பில் தெரிவித்தனர்.
முன்னதாக சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுன் மாலை 3 மணிக்கு மேல் தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, கும்பகோணத்தான் சாலை, பெரியார் நகர் பாலம், அம்மா மண்டப சாலை வழியாக சரியாக மாலை 4.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலை வந்தடைந்தார்.
ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள“ ஜெண்டா மேளம் முழங்க கோவில் நிர்வாகம் சார்பில் nullரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.  அதன் பிறகு ஆரியபட்டாள் வாசல் அருகே பேட்டரி காரில் இருந்து இறங்கி மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார்.

பெருமாளை தரிசனம் செய்த பின்னர் மீண்டும் ஆரியபட்டாள் வாசலில் இருந்து பேட்டரி கார் மூலம் தாயார் சன்னதிக்கு சென்று தாயாரை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நந்தவனம் தோப்பு வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு வந்தார். அங்கு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் உடையவர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன் பிறகு காரில் ஏறி கீழவாசல் வெள்ளை கோபுரம் வழியாக கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, மேல உத்திர வீதி வழியாக மேலவாசல், மேலூர் சாலை ரோடு வழியாக வடக்கு வாசலில் உள்ள அகோபில மடத்திற்கு சென்றார். அங்கு புதிதாக பதவி ஏற்ற ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். முதல்வரை பார்த்து ஜீயர் நீnullங்கள் அடிக்கடி இங்கு வரவேண்டும். அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் மறைந்த ஜீயர்கள் 41, 44, 45 ஜீவசமாதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தரிசனத்தை முடித்துக்கொண்ட முதல்வர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மேலூர்சாலை ரோடு, ராகவேந்திரபுரம் ஆர்ச் வழியாக அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, பெரியார் நகர் மேம்பாலம், கும்பகோணத்தான் சாலை, சென்னை பை-பாஸ் ரோடு வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை சென்றார். முதல்வர் வருகையொட்டி அம்மா மண்டப சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் 3ந்தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காவும் முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சிக்கு வருகை தருகிறார். விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி, திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி பேச உள்ள“ர். இதற்காக ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல்வரை வரவேற்ற கோடை மழை

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தந்தார். இதற்காக தனி விமானம் மூலம் வருகை தந்த முதல்வர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். சரியாக 4.40 மணிக்கு அவர் ரெங்கா ரெங்கா கோபுரத்தை வந்தடைந்தார். அவர் வருகை தந்த சிறிது நேரத்தில் கோடை மழை கொட்டோ கொட் என வெளுத்து வாங்கியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. இதனால் காலையில் இருந்து வாட்டி வதைத்த வெப்பம் தனிந்து மிகவும் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. திருச்சியில் nullநீண்ட நாட்கள“க வாட்டி வதைத்த வெப்பம் முதல்வர் வரவேற்பதற்காகவே கோடை மழை பொழிந்ததாக அங்கு கூடியிருந்தவர்கள் முனுமுனுத்ததை காதால் கேட்க முடிந்தது.
முதல்வரும் மனகுளிர்ச்சியுடன் பெருமாளை தரிசனம் செய்து விட்டு குளிர்ந்த காற்றுடன் காரில் ஏறி திருச்சி விமானம் நிலையம் நோக்கி சென்றார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.

இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை வன்னி விஜயம் செய்தனர்!

Friday, May 31, 2013
இலங்கை::இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர், வியாழக்கிழமை வன்னி படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.

வவுனியா விமானப்படைத் தளத்துக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் வந்தடைந்த இக்குழுவினரை இலங்கை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றார்.

இதனையடுத்து இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் வன்னி கட்டளைத் தளபதிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, வன்னி வாழ் மக்களில் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம், முன்னாள் புலிபோராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பான விளக்கங்கள் இந்திய இராணு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய வடக்கு அதிவேக பாதை உட்பட இலங்கையின் போக்குவரத்துத் துறைக்கு சீனா முதலீடு செய்யவிருக்கிறது!

Friday, May 31, 2013
இலங்கை::கொழும்பு - யாழ்ப்பாணம் புதிய அதிவேக பாதை உட்பட பாதைகள் வலையமைப்பு புகையிரதப்பாதைகள் மற்றும் பல அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இலங்கையின் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.
 
நேற்று பீஜிங்கில் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
 
மேலும் உத்தேச கொழும்பு – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை பணிகளின் ஒரு பகுதியாக கொழும்பு – கண்டி – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகள் மற்றும் மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான தெற்கு அதிவேக பாதையை விரிவுபடுத்தும் பணிகள் என்பவற்றிற்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவும்.
பல்வேறு துறைகளில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
இவ்வருடம் மார்ச் மாதம் சீனாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஷீ ஜின் பிங் அவர்களுக்கு பாராட்டுத்தெரிவித்த ஜனாதி, சீன மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இவ்வெற்றி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கிழக்காசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பல விஜயங்கள் சீனாவின் அரசியல் பொருளாதார சமூக நிலைப்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியதாகவும் சீனாவின் புதிய நிருவாகத்துடன் நெருங்கி செயலாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
 
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீனாவுக்கான நான்காவது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்றது என்றும் தெரிவித்தார். அத்துடன் தனது ஆட்சிக்காலத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு பேச்சுவார்ததைகளின்போது வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நோக்கி செயலாற்றுவதற்காக இரண்டு குழுக்களை அமைப்பதற்கு இரு நாடுகளும் ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
 
 இதன்மூலம் சீன சந்தையில் இலங்கை தயாரிப்புகளான ஆடைகள், இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், தேயிலை, இறப்பர் போன்ற பொருட்களுக்கு விரிவான சந்தை வசதிகிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, May 30, 2013

அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்!

Thursday, May 30, 2013
இலங்கை::அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
 
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
 
கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அண்மைக் காலமாக அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்!

Thursday, May 30, 2013
US::அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.

தனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவராவதுதான் தனது வாழ்நாள் இலட்சியம் என பாத்திமா அல் கப்லி தெரிவித்துள்ளார்.

தாயாரின் கல்வி வேட்கைப் பற்றி கருத்து கூறிய சலாம், 'என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்' என்றார்.

இவரை கண்டால் உடனடியாக போலீசை தொடர்பு கொள்ளவும்: ( LTTE வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன்)

Thursday, May 30, 2013
இலங்கை::மாத்தறையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பிச்சென்ற கைதிகள் தொடர்பான தகவல் தெரிந்திருந்தால், அது குறித்து தமக்கு அறியத் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
முன்னாள் LTTE உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு கைதிகள் அண்மையில் மாத்தறை நகரிலிருந்து தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன் என்பவரும் தப்பிச் சென்றவர்களில் அடங்குகின்றார்.
 
குறித்த கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டினை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
 
இதற்கமைய, இந்த சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 0112 451 634 அல்லது 0112 451 636 என்ற
இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்!

Thursday, May 30, 2013
இலங்கை::பதிவுகள் காலாவதியாகிய நிலையில் இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
 
பதிவுகள் காலாவதியாகியுள்ளதால் வெளிநாட்டு பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
 
 வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இழக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மீண்டும் பதிவுசெய்துகொள்வதால் அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைப்பதுடன் காப்புறுதியும் நீடிக்கப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பதிவு காலாவதியானவர்கள் மூன்று மாதங்களுக்குள் தம்மை மீளப் பதிவுசெய்து கொள்வதால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மேலும் பல நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறுவார்கள் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
 

 

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது!

Thursday, May 30, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது.
 
கல்வியமைச்சின் மொழிக் கல்வி பிரிவின் ஆலோசகர் உயன்கல்ல ஞானரத்ன தேரரின் பங்களிப்புடன் இந்த பயிற்சிநெறி வழங்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர, பயிற்சி நெறி காலத்தில் குறித்த பௌத்த பிக்குகள் குடாநாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு, கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
 
தமிழ்மொழி கற்பதன் ஊடாக ஏற்படும் சமூக நல்லிணக்கம், மற்றும் திறனபிவிருத்தி என்பன நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செலுத்தும் என்று உயன்கல்ல ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
 
பௌத்த மத குருமார் பயிற்சிநெறியை நிறைவு செய்து விடுகை பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை: கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Thursday, May 30, 2013
இலங்கை::வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
 
வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என கூறுகின்றனர். மாகாண சபையால் பொலிஸார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. பொலிஸார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது.
 
அது மாத்திரமின்றி மாகாண சபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்த நாட்டை அழிப்பதற்கு முற்படுகின்றனர்,' என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன இன்று அதிகாலை காலமானார்!

Thursday, May 30, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுpங்கப்பூர் மருத்துவ மனையில் இன்று காலை ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்கும் போது அன்னாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜயலத் ஜயவர்தன கட்சியின் மிக முக்கியமான பல  பதவிகளையும், அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் மருத்துவ மனையில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்ட போது ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படவுள்ளது

பொது பல சேனாவுக்கு மெத் செவனவிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Thursday, May 30, 2013
இலங்கை::காலி,வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து பொது பொது பல சேனா அமைப்பினர் உடனடியாக வெளியேறுமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது பல சேனா அமைப்பினருக்கான இந்த உத்தரவை காலி மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் குநேந்திர முனசிங்க இன்று பிறப்பித்தார்.
 
படகொட கமகே அசங்க என்பவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போதே நீதிபதியினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொது பல சேனாவின் பொதுச்
செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர், விஜித தேரர்,விதாரந்தெனிய நந்த தேரர் ஆகியோருடன் குறித்த கட்டிடத்தை பொது பல சேனாவுக்கு வழங்கியதாக கூறப்படும் லிட்டில் ஸ்மைல் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஆகியோர் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இதன் போது வழக்கினை விசாரணை செய்யத நீதிபதி பொது பல சேனா அமைப்பினர் மெத் செவன கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பித்து தீர்பளித்தார்.
 
கடந்த மார்ச் மாதம் குறித்த கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டதுடன் பொது பல சேனாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. பொது பல சேனாவின் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்த கட்டிடத்தில் இடம்பெறுமென அப்போது பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிராம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் குறித்த கட்டிடம் தொடர்பில் தொடரப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அங்கிருந்து உடனடியாக பொது பல சேனா அமைப்பு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாங்காங்கில் இருந்து சென்னை வந்த இலங்கை தமிழர்கள்: போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து ரூ.100 கோடி மோசடி!!


Thursday, May 30, 2013
சென்னை::தொழிலதிபர்களை குறிவைத்து ஸ்கிம்மர் கருவி மூலம் அவர்களது ஏ.டி.எம். கார்டுகளை போலியாக தயாரித்து ரூ. 100 கோடிக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள்  மோசடி செய்து  இருப்பது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 
மதுரை மற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் தொழிலதிபர்கள் தங்களது ஏ.டி.எம்.கார்டுகளில் இருந்து யாரோ நூதன முறையில் பணம் திருடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் எடுத்து இருப்பதாக  தங்களது செல்போனுக்கு வரும் தகவல் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு தொடர்பு கொண்டனர்.
 
நேரடியாக பணம் ஏதும் எடுக்கப்படவில்லை. தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாக, வங்கிகளிடமிருந்து தொழிலதிபர்களுக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன.
இது குறித்து போலீசில் தொழில் அதிபர்கள் மற்றும் பணம் பறிகொடுத்தோர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு பின்னர் கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
 
அதன் பேரில் பாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இலங்கை தமிழர் சுதானந்தன் (வயது 32) என்பவரை க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரன் மற்றும் செல்லதுரை தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் ஸ்கிம்மர் மற்றும் போலி ஏ.டி.எம்.கார்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
 
இவர் கொடுத்த தகவலின்
பேரில் மற்ற இலங்கை தமிழர்களான சந்திரமோகன் (வயது 42), பிரகாஷ் (வயது 25), முரளிதரன் (வயது 44) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
 
பிடிப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் அனைவரும் முதலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொழில் அதிபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பட்டியல் போட்டுள்ளனர். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்பது குறித்து நோட்டமிட்டு, அதுபோன்ற வணிக நிறுவன பகுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இவர்களே ஆட்களை வேலைக்கு அமர்ந்தி, அவர்களிடம் தரப்பட்ட ஸ்கிம்மர் இயந்திரம் மூலம் தொழிலதிபர்களின் ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை தெரிந்து கொண்டு, அதனடிப்படையில் 300 போலி ஏ.டி.எம்.கார்டுகளை தயாரித்துள்ளனர்.
 
இந்த ஏ.டி.எம். கார்டுகள் மூலம் அவர்கள் நேரடியாக பணம் எடுப்பது இல்லை. ஆன் லைன் மூலம் தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி அதை இரண்டாம் தர விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
அவர்கள் 100 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு தவிர சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மோசடியில்  ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
முழுமையான விசாரணைக்கு பிறகு இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.