Friday, May 31, 2013
இலங்கை::இலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக புலிகள் இயக்க முன்னாள் உ
றுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, இலங்கை விமானப்படையின் அன்ரனோவ் - 32 விமானத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 32 இலங்கை படையினர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, இந்த விமாணம் தொழில்நுட்பக் கோளாறினால், வீழ்ந்து நொருங்கியதாக இலங்கை விமானப்படை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
எனினும், தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இந்த விமானத்தை புலிகள் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியதாக தெரியவந்தது.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment