Friday, May 31, 2013
இலங்கை::தம்பலகமத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை காரணமாக உயிர் ஆபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் இதனால் பாதுகாப்புக் கடவை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக சிராஜ் நகர், அரபா நகர், 95ம் கட்டை ஆகிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிக் கடவைகள் பேராபத்துமிக்கவையாக உள்ளன.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ள போதும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
பொது மக்களின் போக்குவரத்து நலனைக் கருத்திற்கொண்டு மிகவிரைவில் பாதுகாப்புக் கடவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இதற்கு பிரதேச சபை பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment