Friday, May 31, 2013
இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்
வகையில், தேர்தல் சட்ட மூலத்தில் அரசாங்கம் மாற்றங்களை செய்யவுள்ளது.இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்
அதன்படி 1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்திருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இந்த சட்ட மூலம் எதிர்வரும் ஜுன் மாதம் 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில், வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெராதவர்களுக்கு, மேலதிக வாக்காளர் பெயர் பட்டியல் ஒன்றின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 13ம் திருத்த சட்டம் குறித்து நாட்டில் உள்ள பொது மக்களை தெளிவுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டுள்ளது.
இந்த வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி முதல், 12ம் திகதி வரையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவிருப்பதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment