Friday, May 31, 2013
பாங்காக்::மன்மோகன்சிங் வருகையால் இருதரப்பு உறவு மேம்படும் என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மன்மோகன்சிங் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஒருநாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாய்லாந்தின் மேற்கத்திய நாடுகளைப் பாருங்கள் கொள்கை மற்றும் கிழக்கு பார்வை கொள்கை காரணமாக இரு நாடுகளைச் சேர்ந்த உயர்நிலைக் குழுக்கள் அடிக்கடி பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாலும், இந்தியாவுடன் உள்ள உறவு வலுத்து வருகிறது. அந்த வகையில் மன்மோகன்சிங் வருகை மூலம் இந்த உறவு மேலும் வலுப்பெறும்.
இந்த பயணத்தின்போது, வின்வெளி ஆய்வு, தகவல் தொழில் நுட்பம் கல்வி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனையை தடுப்பதற்காக நிதி புலனாய்வு அமைப்பு நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மரை உள்ளடக்கிய முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேலும் சில விஷயங்கள் குறித்தும், மன்மோகன்சிங்குடன் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஆலோசனை நடத்துவார் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பிரதமர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.
No comments:
Post a Comment