Friday, May 31, 2013
இலங்கை::இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர், வியாழக்கிழமை வன்னி படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.
வவுனியா விமானப்படைத் தளத்துக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் வந்தடைந்த இக்குழுவினரை இலங்கை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றார்.
இதனையடுத்து இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் வன்னி கட்டளைத் தளபதிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, வன்னி வாழ் மக்களில் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம், முன்னாள் புலிபோராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பான விளக்கங்கள் இந்திய இராணு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment