Friday, May 31, 2013
இலங்கை::கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடைகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட யாசகப் பெண் இரண்டு மணித்தியாலங்களுக்குள் பிச்சையெடுத்து வருமானமாக 4800 ரூபா பெற்றதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையத்துக்குள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் உட்பட நால்வர் ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களால் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதில் பிச்சையெடுத்த பெண்ணொருவர் காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரையிலான இரண்டு மணித்தியாலங்களில் 4800 ரூபாவை வருமானமாகப் பெற்றதாக தெரியவந்துள்ளது.
கோட்டை நீதிமன்ற நீதிவான் திலின கமகே இந்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.
No comments:
Post a Comment