Friday, May 31, 2013
இலங்கை::தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கெண்டுள்ளார்.
இலங்கை::தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கெண்டுள்ளார்.
சுற்றுலா வர்த்தகம் நிர்மாணத்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதே இந்த விஐயத்தின் நோக்கம் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஐயத்தின் போது தாய்லந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கண்டிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் சமய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
கு
றிப்பாக சியம் மாக பீடத்தின் 260 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
நாளை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் மாலைத்தீவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment