Thursday, May 30, 2013

வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை: கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Thursday, May 30, 2013
இலங்கை::வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
 
வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என கூறுகின்றனர். மாகாண சபையால் பொலிஸார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. பொலிஸார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது.
 
அது மாத்திரமின்றி மாகாண சபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்த நாட்டை அழிப்பதற்கு முற்படுகின்றனர்,' என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

No comments:

Post a Comment