Friday, May 31, 2013
இலங்கை::வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை::வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாடுகளைக் கொல்வதற்காக தீ பற்றி கொல்லப்பட்ட பௌத்த பிக்குவிற்கு அனுதாப அலைகள் இன்னும் தலைநகரில் இருப்பதாலும், திறைமறைவில் அழுத்தங்கள் இருப்பதாலும், இறைச்சி வியாபாரிகள் தங்களது கடைகளைத் திறப்பதற்கு தயங்கி வருகின்றனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த சகல இறைச்சிக் கடைகளும் இன்று திறப்பதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கி இருந்தது. எனினும் வழமையான இறைச்சிக்கடைகள் திறக்கப்படவில்லை.
இறைச்சிக் கடைகள் திறக்கப்படாததற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு பொரளைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment