Sunday, December 13, 2015

இலங்கை அகதிகள் முகாம்களில் டைரக்டர் மு.களஞ்சியம் உதவி!

Sunday, December 13, 2015
திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் ஏற்கனவே தமிழர் நலம் பேரியக்கம் என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.. இந்த அமைப்பு மூலமாக, புலம் பெயர்ந்து வந்து, இங்கு அகதிகளாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு அவ்வப்போது கல்வி உதவி உட்பட பல உதவிகளை சத்தமில்லாமல் செய்துவருகிறார்.
 
தற்போது பெய்த அடைமழைக்கு கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாமும் தப்பவில்லை.. அங்கே நேரடியாக சென்ற இயக்குனர் மு.களஞ்சியம் அங்குள்ள மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு மேல் சப்பாத்தி தயார் செய்து கொடுத்து பலரது பசியையும் இவர் தணித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Friday, December 4, 2015

114 ஆண்டுக்கு பின் சென்னையில் கனமழை!!

Friday, December 4, 2015
சென்னை:சென்னையில், 114 ஆண்டுகளுக்கு பின், டிசம்பர் மாதத்தில், நேற்று, மிக அதிகமாக மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவ மழையின் போது, நவ., மற்றும் டிச., மாதங்களில் அதிகளவு மழை பதிவாகும். டிசம்பர் மாதத்தில், மிக அதிக அளவாக, 1901 டிச., 10ல், 26 செ.மீ., மழை பதிவானது; 2005 டிச., 3ல், 23 செ.மீ., மழை பதிவானது. தற்போது, டிச., 1 காலை, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையிலான, 24 மணி நேரத்தில் சென்னையில், 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. ஒரு நுாற்றாண்டுக்கு பின், சென்னையில் டிசம்பர் மாதம் பெய்த, மிக அதிகபட்ச மழை அளவு இது தான்.

மழைக்கு 9 பேர் பலி-நிவாரணம் அறிவிப்பு:

தமிழகத்தில், கன மழைக்கு பலியான, ஒன்பது பேரின் குடும்பங்களுக்கு, தலா, நான்கு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பருவ மழை தீவிரத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில், கால்வாயில் தவறி விழுந்தும், மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் குடும்பத்திற்கு தலா, நான்கு லட்சம் ரூபாய், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பாதிப்பு பகுதிகளில் முதல்வர் பார்வை:

முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பார்வையிடுகிறார். நேற்றே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. 'மோசமான வானிலையால், ஹெலிகாப்டர் பறக்க இயலாது' என, பைலட்கள் தெரிவித்ததால், வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதல்வர் இன்று பார்வையிடுகிறார்.

Friday, November 27, 2015

ரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது.
 
இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது.
 
இது சம்பந்தமான வரைவு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மெட்வதேவ் கூறி இருக்கிறார்.
முன்னதாக துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 15 சதவீத விவசாய பொருட்களுக்கு ரஷியா தடை விதித்துள்ளது. இந்த பொருட்கள் மக்கள் சாப்பிடும் அளவுக்கு தரமானதாக இல்லை என்று கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
துருக்கி நாட்டில் விளையும் விவசாய பொருட்கள் பெருமளவு ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துருக்கியின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ரஷியாவுடனான வர்த்தகம் 2–வது இடத்தில் உள்ளது. இந்த தடையால் துருக்கிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
 
மேலும் ரஷிய நாட்டினர் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மூலம் துருக்கிக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்து வந்தது குறிப்பாக ரஷிய நாட்டினர்தான் அங்கு அதிகமாக சுற்றுலா வருவது வழக்கம். ரஷியாவின் இந்த தடையால் இதன் வருமானமும் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ச!

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக கோத்தபாய ராஜபக்ச, இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிவிட்டு, வெளியேறும் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
புலி தீவிரவாதிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோத்தபாய, எனது காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை. நான் தற்போது பாதுகாப்புச் செயலாளர் அல்ல. எனது காலத்தில், அவற்றை ஒட்ட இடமளிக்கவில்லை. இதனால்தான் ஆணைக்குழுக்களுக்கு வந்து செல்கிறோம் என்றார்.

Sunday, October 25, 2015

சிரியா விஷயம் ரொம்ப 'சீரியஸ்': அமெரிக்கா, ரஷ்யா, சீனா பலப்பரீட்சை!!

Sunday, October 25, 2015
நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போதே, மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம். அந்தஅளவுக்கு சிரியாவில் நிலைமை பயங்கரமாக உள்ளது. இங்கு நடக்கும்உள்நாட்டு சண்டை, சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் வான் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா போர் விமானங்கள் ஒருவேளை நேருக்கு நேர் மோதிக் கொண்டால், அதுவே மூன்றாம் உலகப்போருக்குவித்திடும். சின்ன சிரியாவால் இவ்வளவு பெரிய ஆபத்தா... அப்படி என்ன தான்சிரியாவில் நடக்கிறது என பார்ப்போம்.

கடந்த 1961 வரை எகிப்தின் ஒரு பகுதியாகவே சிரியா இருந்தது. 1961 செப்.28ல் தனிநாடாக மலர்ந்தது. இங்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. 1970 முதல் 'பாத்' எனும் கட்சி ஆட்சி செய்கிறது. 1970 முதல் 2000 வரை ஹபிஸ் அல் ஆசாத் என்பவர் ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடக்கிறது. இவரது மகன் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு வந்ததும், ஜனநாயகத்துக்காக போராடிய குழுக்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து ஜனநாயகத்தை விரும்பிய சில போராட்ட குழுக்கள் புரட்சியில் குதித்தன.தவிர, சிரியாவில் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப் போர் நடக்கிறது. இங்கு சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவை சேர்ந்த பஷார் அல்- ஆசாத் அதிபராக இருப்பது, பெரும்பான்மையாக உள்ள சன்னிபிரிவுக்கு பிடிக்கவில்லை. சன்னி பிரிவுக்குஆதரவாக ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் போரில்குதித்தன. இதன் விளைவாக 2011ல்சிரியாவில் உள்நாட்டு போர் துவங்கியது.இதில், அதிபர் ஆசாத்தை,அமெரிக்கா நேரடியாக எதிர்க்கிறது. மறுபக்கம் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. இவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால், சிரியா முழுவதும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அஞ்சுகிறது.

இதற்கிடையே ஈராக் மற்றும்சிரியாவின் சில பகுதிகளை பிடித்து ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு மீது அமெரிக்க ஆதரவு கூட்டு படைகளும், ரஷ்யா ஆதரவு படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு எதிரான விமான தாக்குதலை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. ரஷ்யா ஐ.எஸ்.ஐ.எஸ்., முகாம்களை மட்டுமல்லாமல், அமெரிக்காஆதரவு கிளர்ச்சி படைகளையும் தாக்குகிறது. இது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.கிளர்ச்சிப்படைகளை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது. மேலும், வான்வழி தாக்குதலின் போது இருநாட்டு போர் விமானங்களும் அருகருகே பறக்கின்றன. இவை சற்று தடுமாறினால், 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். அவ்வாறு நடந்தால் அமெரிக்கா, ரஷ்யா இடையே நேரடியாக போர் ஏற்படும்.

தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில நாடுகளும் சிரியா களத்தில் உள்ளன. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பக்கம் சேரும் பட்சத்தில், உலக நாடுகளில் இரு பிரிவு ஏற்பட்டு, உலகப்போர் வெடிக்கும். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது சிரியாவில் நடக்கும் உள்ளூர் போரில் லட்சக்கணக்கான மக்கள்கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது உலகப் போராக மாறினால், பேரழிவு ஏற்படும். இதனை தவிர்க்க, ஐ.நா., சபை மற்றும் உலக நாடுகள் சேர்ந்து சிரியா பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே சாமான்யமக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
 
கண் வைக்க காரணம்:
அமெரிக்காவை பொறுத்தவரை உலகின் எந்த நாட்டிலும் தங்களுக்கு சாதகமான அரசை அமைத்துக் கொள்ள விரும்பும். அந்த வகையில் தான் சிரியா புரட்சி படைகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்குகிறது.ரஷ்யா, சிரியா அரசுடன் 40 ஆண்டுகளாக நம்பிக்கையான நட்பு நாடாகஉள்ளது. சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்கள் நாட்டுக்கு வெளியே அமைத்துள்ள ஒரே கடற்படை தளம் இதுதான். இதன் காரணமாகத் தான் சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

3 லட்சம்:
இந்த போரால் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். இதில் 12,000 குழந்தைகளும் அடங்குவர்.

24 லட்சம்:
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். 5 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அழியும் பாரம்பரியம்:

சிரியா போரில் புராதனசின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன.பல்மைராவில் உள்ள பாபிலோனிய கல்துாண்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.

87:ஐ.நா., சபையால்அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில், சிரியா பரப்பளவு (௧,௮௫,௧௮௦ ச.கி.மீ.,) அடிப்படையில் 87வது இடத்தில் இருக்கிறது.

76 லட்சம்:
சிரியா போரால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து, உள்நாட்டிலேயேஅகதிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 76 லட்சம் பேர். இதில் 50 சதவீதம் பேர்குழந்தைகள்.

20 லட்சம்:
உள்நாட்டில் அகதிகளாக மாறியவர்கள் தவிர, துருக்கி, லெபனான், ஈராக், எகிப்து, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் துருக்கியில் உள்ளனர்.
 
2011:சிரியா உள்நாட்டுப் போர் 2011ல் ஆரம்பித்தது. அப்போது அதன் மக்கள் தொகை 2.3 கோடி பேர். போரின் காரணமாக அதில் பாதி பேர் இன்றுஅகதிகளாக மாறிவிட்டனர்.மனித உரிமை மீறல்ரசாயன ஆயுதங்கள்பயன்பாடு, பாலியல் தொல்லை, குழந்தைகள் உள்ளிட்ட கைதிகளை துாக்கிலிடுவது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள்அதிகமாக நடக்கிறது.

30: சுதந்திரத்துக்குப்பின் அதிபராக இருந்தவர்களில் ஹபிஸ் அல் ஆசாத் என்பவர் 1971 முதல் 2000 வரை 30 ஆண்டுகள் பதவியில் இருந்தார். தற்போது 2000 முதல் 15 ஆண்டுகளாக அவரது மகன் பஷார் அல் ஆசாத்பதவியில் இருக்கிறார்.

முதல் உலகப்போர்(1914-- 18):
1914 ஜூன் 28ல் ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாட்டை, காவ்ரிலோ பிரின்சிப் என்ற செர்பிய நாட்டை சேர்ந்தவன் சுட்டு கொன்றான். இதனால் செர்பியா மீது ஆஸ்திரியா போர் தொடுத்தது உலக போர் துவங்க உடனடிகாரணமாக அமைந்தது. ஆஸ்திரியாவுக்குஆதரவாக ஹங்கேரி, ஜெர்மனி, ஒட்டோமன்,பல்கேரியா ஆகிய நாடுகள் களமிறங்கின.இவர்களை எதிர்த்து நேச நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, செர்பியா, அமெரிக்கா,இத்தாலி மற்றும் பல நாடுகள் போரிட்டன. முதலாம் உலகப்போர் பெரும்பாலும் ஐரோப்பா கண்டத்தை மையப்படுத்தியே நடந்தது. போரில் இயந்திரத்துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீனஆயுதங்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டன.தரைவழி மட்டுமல்லாமல், வான்வழியாகவும், நீர்மூழ்கி கப்பல் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாக இருந்தது.போரில் சுமார் ஏழு கோடி வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் இரண்டு கோடி வீரர்களும், பொதுமக்களும் இறந்தனர். நேச நாடுகள் வெற்றியடைந்த போதிலும், இருதரப்பிலும் சேதம் அதிகமாக இருந்தது. போரினால் பொருளாதார ரீதியாகவும், நோய் தொற்றுகளாலும் மக்கள் பாதிப்படைந்தனர்.ஆஸ்திரியா, ஹங்கேரி, ரஷ்யா போன்ற ராஜ்ஜியங்கள் துண்டுகளாகின. உலக நாடுகள் மத்தியில் இதுபோன்ற மற்றொரு போர் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் பன்னாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர போடப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாகஉருவான நாடுகளின் நிலையற்ற தன்மையும் 2ம் உலகப்போர் ஏற்பட காரணமாக அமைந்தன.

இரண்டாம் உலகப்போர்(1939- - 45):
ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாடு பிடிக்கும் ஆசையே இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது. இவர் போலந்து மீது மேற்கொண்ட படை யெடுப்பே போரின் துவக்கமாக இருந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் சில நாடுகள் இணைந்து பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை எதிர்த்தன. ஹிட்லர் படைகள் ஐரோப்பாவின் பெரும்பகுதியை பிடித்து பிரிட்டன் அருகே வரை சென்றன.

ரஷ்யாவின் மீது ஜெர்மனியின் நாஜி படைகள் போர் தொடுத்தது. இதனால் ரஷ்யா நேசநாடுகள் பக்கம் சேர்ந்தது. மற்றொரு பக்கம் ஜப்பான், சீனாவின் பல பகுதிகளை கைப்பற்றி இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறி விட்டது. 1942 வரை ஜெர்மனி, ஜப்பான் கைகளே ஓங்கி இருந்தன. ரஷ்யாவும், அமெரிக்காவும் போரில் இறங்கிய பின் தான் நேசநாடுகளின் வெற்றி உறுதியானது.1945 மே மாதத்தில் ஜெர்மனி தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்தது. ஆகஸ்ட் மாதம் ஹிரோசிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதால் ஜப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. உலகில் பல புதிய ஜனநாயகம் மலர்ந்தது. அமெரிக்காவும், ரஷ்யாவும் புதுவல்லரசு நாடுகளாக மாறின. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காக 1945ல் ஐக்கிய நாடுகள் சபைஏற்படுத்தப்பட்டது.

Wednesday, October 21, 2015

ஐ நா தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க உதவுக - மகாநாயக்கர்களிடம் ஜீ.எல் கோரிக்கை!

Wednesday, October 21, 2015
ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கு தலையிடுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான வேண்டுகோள்கள் அடங்கிய கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் உட்பட பல மதத்தலைவர்களிற்கும் தான் அனுப்பிவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கியநாடுகளால் மனிதஉரிமை மீறல்கள் குறித்து வலியுறுத்தமாத்திரம் முடியும், நாடொன்று அரசியல்சீர்திருத்தங்களை முன்னெடுக்க செய்வதற்கான ஆணைஅதற்கு இல்லை அதுபோல அதனால் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது எனதெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகவும்,இந்த தீர்மானங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்குமாறும் கோரி தான் மதத்தலைவர்களிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் வந்தால் சட்ட நடவடிக்கை : தினேஸ் குணவர்த்தன!

Wednesday, October 21, 2015
பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் உள்ளக விசாரணை நடைபெறுமாயின் அது அரசியலமைப்பை மீறு வதாகவே அமையும். அவ்வாறு அரசிய லமைப்பை மீறும் செயற்பாடுகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயங்க மாட்டோம் என மஹிந்த அணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
'ஐக்கிய நாடுகள் உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணையே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதனை உள்ளக விசாரணை பொறிமுறை என்று கூற முடியாது. வெளிநாடுகளின் தலையீடுகள், பங்கேற்புகள், நிபந்தனைகள் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்ற உள்ளக விசாரணையையே உள்ளகப் பொறிமுறை என்று நாம் கூற முடியும்.
 
அதனை விடுத்து வெளிநாட்டு, பொதுநலவாய நீதிபதிகளுடனும் வெளிநாட்டுப் பங்களிப்புடனும் உள்ளக விசாரணை இடம் பெறுமாயின் அதனை ஒருபோதும் உள்ளக விசாரணை என்று கூற முடியாது. அவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கவும் முடியாது. மறுபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் கலப்பு விசாரணையே இடம் பெற உள்ளதாக கூறி வருகிறார். அப்படியாயின் அது சர்வதேச விசாரணை என்றே பொருள்படும். அதனை எவ்வாறு உள்ளக விசாரணை என்று கூறுவது?
 
இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிநாட்டுத் தலையீடுகளுடனும் பொதுநலவாய பங்களிப்புடனும் விசாரணை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. இதற்கு அனுமதிக்கவும் முடியாது. அதுமட்டுமன்றி இந்த உள்ளக விசாரணை எனக் கூறப்படும் பொறிமுறையில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்களும் இலங்கையின் பல பாகங்களில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்கள் அமைக்கப்படுவதானது எமது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும். அதற்கும் ஒருபோதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது.
 
எனவே அரசாங்கம் உள்ளக விசாரணை என்ற போர்வையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் ஒரு விசாரணை செயற்பாட்டை இலங்கையில் முன்னெடுக்குமாயின் அதனை எதிர்த்து நிற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படுமானால் அது எமது நாட்டின் அசியலமைப்பை முற்று முழுவதுமாக மீறுவதாக அமையும். அதனை மேற்கொள்வதற்கு நாம் விடமாட்டோம். அவ்வாறு அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படுமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தயங்காது என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
 
அரசியலமைப்பை மீறுவதற்கு இடமளிக்க முடியாது. எமது இறைமை உள்ள நாட்டின் அபிமானத்தை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னைய ஆட்சிக்காலத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு நிபுணர்களை ஆலோசனை வழங்க நியமித்தமையை தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டுத் தலையீடு எனக் கூறுகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை. அதனை வெளிநாட்டு தலையீடு என்று கூற முடியாது. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கவே டெஸ்மன் டி சில்வா தலைமையில் சர்வதேச குழுவினர் நியமிக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கம் கூறுகின்ற உள்ளகப் பொறிமுறை கட்டமைப்பில் வெளிநாட்டுப் பங்கேற்பு நேரடியாகவே இடம் பெறுகின்றது.
 
வெளிநாடுகளிலிருந்து வருகின்ற நீதிபதிகள், மற்றும் வழக்கறிஞர்கள் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப செயற்படமாட்டார்கள். அப்படியாயின் அது எமது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமையும். எனவே இவை தொடர்பில் நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும். எமது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது நாடு முழுவதும் இந்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் மக்களை தெளிவூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது.
 
அதன் ஒரு கட்டமாகவே கொழும்பில் இன்று பாரிய கூட்டமொன்றை நடத்த இருக்கின்றோம். அதுமட்டுமன்றி நாங்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எதிர்கட்சியில் செயற்பாடுகளை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

பொதுமக்களின் படுகொலைக்கு புலிகளே பெருமளவில் பொறுப்பு: பரணகம ஆணைக்குழு அறிக்கை!

Wednesday, October 21, 2015
இறுதிக்கட்டப் போரின் கடைசிக் கட்டத்தில்  புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றொழித்ததாக மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் தொடரில் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த மெக்ஸ்வெல் பரணகம மற்றும் உதலாகம ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
 
இந்நிலையில் குறித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் உள்ளடக்கம் குறித்து திவயின பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
 
குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உதலாகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
 
மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி போரின் முன்னரங்குகளுக்கு அனுப்பி வைத்தமை, மனிதக் கேடங்களாக பொதுமக்களை பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தப்பிவர முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை போன்ற செயல்களின் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு புலிகள் பெருமளவில் காரணமாக இருந்துள்ளார்கள்.
 
இறுதிக்கட்டப் போரின் கடைசி நேரத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
 
எனினும் தாருஸ்மான் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று பாரியளவில் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்றும், தாருஸ்மான் அறிக்கை சர்வதேச மட்டத்தில் இலங்கையை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் மக்ஸ்வெல் பரணகம அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதாகவும் திவயின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, October 20, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினர் தனி கூட்டணி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து புதிய முன்னணி உருவாக்கப்படவுள்ளது. இந்த முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துக் களமிறங்கவிருப்பதாக அறியமுடிகின்றது. இது தொடர்பிலான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தை, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தலைமையில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
 
இந்த முன்னணிக்கு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே ஆதரவளிக்கவிருக்கின்றனர். இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.
 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, அதன் பொறுப்பை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கனடா தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது!

கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், கடந்த 9 ஆண்டுகளாக ஆண்டு வந்த, கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிரதமராக ஜஸ்டின் ட்ரூடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
கனடா நாடாளுமன்றத்தின் 338 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் படுதோல்வியை சந்தித்தனர். 181 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது
 
லிபரல் கட்சி. கனடாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 170 இடங்கள் தேவை. தற்போது பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அக்கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ருடா (43) புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பியரே ட்ருடாவின் மகன் ஆவார்.
கனடாவின் புதிய பிரதமராகும் ஜஸ்டின் ட்ருடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி என்ற ஈழத்தமிழர் வெற்றி பெற்றுள்ளார். இது தவிர இந்திய-கனடியர்களான 19 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, October 19, 2015

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: விஷால் வெற்றி!

Monday, October 19, 2015
சென்னை: பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகியுள்ளனர்.
அனல் பறந்த தேர்தல் களம்
 
ஒரு மாதமாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னையில் நடந்து முடிந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தேர்தல் விறுவிறுப்பாக, அனல் பறக்க நடந்தது. கடந்த மூன்று முறை தலைவராக இருந்த சரத்குமாரை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணியினர் களம் இறங்கினர். இதனால் இந்தாண்டு தேர்தல் அனல் பறந்தது. தேர்தல் தேதி அறிக்கவிப்பட்ட நாள் முதல் இரண்டு அணியினரும் மாறி மாறி ஒருவர் மீது குற்றம் சாட்டினர். அதிலும் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவி, சிம்பு போன்றோர் எதிர் அணியினர் மீது கடுமையான வார்த்தைகளாலும், அநாகரிகமான பேச்சாலும் வசை பாடினர்.
 
ஜனநாயக முறைப்படி தேர்தல்
 
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், 24 உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பதவிகளுக்காக தேர்தல் நடந்தது. இதில் சரத்குமார் தலைமையிலான அணி மற்றும் விஷால் தலைமையிலான அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது.
 
சாதித்தது பாண்டவர் அணி
 
நாசர் வெற்றி : நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் நாசர், சரத்குமார் மற்றும் சிவசாமி ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் நாசருக்கு 1344 ஓட்டுகளும், சரத்குமாருக்கு 1235 ஓட்டுகளும், சிவசாமி என்பவருக்கு 4 ஓட்டுகளும் கிடைத்தன. இதன்மூலம் நாசர் 109 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.
 
விஷால் வெற்றி : பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், ராதாவியும் போட்டியிட்டனர். இதில் விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி பெற்று இருக்கிறார்.
 
கார்த்தி வெற்றி : பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் போட்டியிட்டனர். இதில் கார்த்திக்கு 1493 ஓட்டுகளும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1080 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் கார்த்தி 413 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 
கருணாஸ், பொன்வண்ணன் வெற்றி
 
நடிகர் சங்க தேர்தலில் துணைத்தலைவர் போட்டியில் விஷால் அணியின் கருணாஸ், பொன்வண்ணன் வெற்றி பெற்றுள்ளனர். கருணாஸ் 1,362 ஓட்டுகளும், பொன்வண்ணன் 1,235 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட விஜயகுமார் 1,115 ஓட்டுகளும், சிம்பு 1,107 ஓட்டுகள் மட்டுமே பெற்றனர்.
 
அநேக நடிகர்கள் ஓட்டுப்பதிவு
 
நடிகர் சங்க தேர்தலில் மூத்த நடிகர்கள் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை பலர் வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், ராதாரவி, விஷால், சரத்குமார், கார்த்திக், கார்த்தி, சிவகார்த்திகேயன், நாசர், மன்சூர் அலிகான், சசிகுமார், சமுத்திரகனி, ஆர்யா, சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம், அர்ஜூன், ஜிவி.பிரகாஷ் குமார், பிரபு, விக்ரம் பிரபு, எஸ்வி சேகர், சாந்தனு, சுரேஷ், பிரசன்னா, கருணாஸ், போண்டா மணி, கிங்காங், ராமராஜன், அம்பிகா, ராதா, ராதிகா, லட்சுமி, சுகாசினி, குட்டி பத்மினி, பசி சத்யா, கே.ஆர்.விஜயா, சீமா, லதா, ரேவதி, அர்ச்சனா, சினேகா, சங்கீதா, குஷ்பு, உள்ளிட்ட பலர் நடிகர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
 
83 சதவீதம் ஓட்டுப்பதிவு
 
நடிகர் சங்கத்தில் மொத்தம் 3139 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1824 பேர் நேரடியாகவும், 783 பேர் தபால் ஓட்டுக்கள் மூலம் ஓட்டை பதிவு செய்தனர். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடிகர் சங்கத்தில் 83 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறேன் - ராதாரவி
 
நடிகர் சங்க தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் ராதாரவியும், நாசர் அணி சார்பில் விஷாலும் போட்டியிட்டனர். இதில் விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷால் அமோக வெற்றி பெற்று இருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி... தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்கிறேன். விஷாலுக்கும், அவரது அணியினருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Sunday, October 18, 2015

புலிகளின் முன்னாள் (கொலையாளி) அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி மரணம்!

Sunday, October 18, 2015
புலிகள் இயக்கத்தின் முன்னாள் (கொலையாளி)அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.

புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி
2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கொழும்பில் சிகிச்சை பெற்றுள்ளார்.

திடீரென அவரது உடல் நிலமை மோசமாகியதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 5, 2015

.ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணி! பிரேரணை கொண்டுவரவுள்ளது!

Monday, October 05, 2015
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  ஆதரவு அணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
அமெரிக்கப் பிரேரணைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியதற்கு குறித்த பிரேரணையில் கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ள மஹிந்த ராஜபக்ச   ஆதரவு அணியினர், அதிலுள்ள அபாயங்களையும் பட்டியலிட்டுக் காட்டவுள்ளனர்.
 
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போதே மேற்படி பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
 
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி., தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி., ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ
 
நாணயக்கார எம்.பி., தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. ஆகியோர் இணைந்தே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
பிரேரணையை வாசுதேவ நாணயக்கார சமர்ப்பிக்கவுள்ளார். எனினும், அரசு சபை இதை ஏற்குமா என்பது கேள்விக்குறியே. ஐ.நா. அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துவதற்குக் காலம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், அதனுடன் தொடர்புடைய மற்றுமொரு பிரேரணையை விவாதத்துக்கு எடுக்குமா என்பது கேள்விக்குறியே.
 
தனிநபர் பிரேரணையாக அதை கொண்டுவந்தாலும் விவாதத்துக்கு எடுப்பதற்கு நாள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜேவிபி குற்றம்சுமத்தியுள்ளது!

Monday, October 05, 2015
தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜேவிபி குற்றம்சுமத்தியுள்ளது. பத்தரமுல்லை பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமை செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
 அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் உள்நாட்டு பிரச்சினையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது மக்களுக்கு செய்த பாரிய தவறாகும்.
 
தற்போதைய நிலைமையில், ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணையை நடத்தாமல் விடுவதானது, வெளியில் விசாரணையை கை நீட்டி அழைப்பதாக அமையும். அத்துடன் இது சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொண்டு மேற்குலக நாடுகளுக்கு தலையிட இடமளிப்பதாகவும் அமைந்து விடும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Sunday, October 4, 2015

மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனீவா அறிக்கை ஊடாக வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வழிபிறந்துள்ளது - தயான் ஜயதிலக!

Sunday, October 04, 2015
மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனீவா அறிக்கை ஊடாக வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வழிபிறந்துள்ளதாக சிரேஷ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக விமர்சித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்குற்றம் தொடர்பான பொறிமுறை காரணமாக சர்வதேச சக்திகளுக்கு இலங்கையில் நுழைவதற்கான வாயில் திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
 
சிங்கள இணையத்தளமொன்றுக்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,ஜெனீவா அறிக்கைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக இலங்கையின் நிலை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் இலங்கைக்குள் அந்நிய ஆதிக்க சக்திகளின் தலையீடு அதிகரிக்கும் என்றும் தயான் ஜயதிலக விமர்சனம் செய்துள்ளார்.

Saturday, October 3, 2015

எம்.வீ.சன்.சீ.கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு (புலிகளின்)பேர் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Saturday, October 03, 2015
எம்.வீ.சன்.சீ.கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் வரையில் இந்த கப்பலில் கனடாவைச் சென்றடைந்தனர்.

இந்த கப்பலில் உள்ள அகதிகள்  புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடினமான விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் ஏற்கனவே  புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது இரண்டு பேர் யுத்தக்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

முழுமையான அரசியல் யாப்புக்கு அமையவே உள்ளக பொறிமுறை: மைத்திரிபால!

Saturday, October 03, 2015
முழுமையான உள்ளக பொறிமுறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 
இது இலங்கையின் அரசியல் யாப்பு ஏற்புடையதாகவே முன்னெடுக்கப்படும்" என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபை அமர்வில் கலந்து கொண்டுவிட்டு, நாடு திரும்பிய அவர் நேற்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

" அமெரிக்காவின் பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தை நீக்கியுள்ளோம்.

இந்த நிலையில், மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில், அனைத்து கட்சிகள், சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களில் தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

" மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பொரு­ளா­தார தடை விதிக்­கப்­படும் ஆபத்தும் காணப்­பட்­டது. அதற்கு முன் ஏற்­பா­டாக ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை நீக்கம், ஐரோப்­பியன் ஒன்­றி­யத்தின் மீன் இறக்­கு­மதி தடை போன்­றன விதிக்­கப்­பட்­டன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஆட்­சி­ய­மைத்து இந்த நிலை­மையை மாற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பித்தோம்.

அதன் முதற்­ப­டி­யாக 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்றி எனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்கள் சில­வற்றை குறைத்தேன். சுயாதீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தேன். நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் மனித உரி­மை­க­ளை­யும் பாதுகாத்தோம்.

காணாமல் போதல், கொலைகள், மோதல்கள், தாக்­கு­தல்கள் இல்­லாத ஜனா­நா­யத்­து­ட­னான நல்­லாட்­சியை உரு­வாக்­கினோம். ஜன­வரி 8 ஆம் திகதி இந்த புரட்­சி­யினை உரு­வாக்­கினோம். அதன்­பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் திக­தியின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்தி அர­சியல் இணக்­கப்­பாட்டை நிறு­வினோம்.

இதன்­மூலம் சர்­வ­தேச ஆத­ரவு கிடைத்­தது. எமது நட­வ­டிக்­கையை சர்­வ­தேசம் வர­வேற்­றது" எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணைஜனநாயகத்தையே வலியுறுத்துகிறது: ரணில்!

Saturday, October 03, 2015
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணை பிரதானமாக இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பிலேயே வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே இலங்கை விடயத்தை ஜெனீவாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பித்தது.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கையை விடுத்த மகிந்தராஜபக்ஷவே சர்வதேச சட்டத்திட்டங்களின் படி செயற்படுவதாக உறுதியளித்தார்.

ஆனால் தற்போது சம்பூரணமாக உள்ளக விசாரணை ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற நிலையில் அதற்கும் அவர்களே எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது ஏமாற்றம், மன வருத்தம்: முதல்வர் ஜெ!

Saturday, October 03, 2015
சென்னை: ஐ.நா., சபையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேறியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.,வின் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது. தீர்மானம் ஓட்டெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேறியது ஏமாற்றம், மன வருத்தம் அளிக்கிறது. 
 
வலுவற்ற தீர்மானம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை பயக்காது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீ்ரமானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விசாரணை, சர்வதேச விசாரணைக்கு ஈடானதல்ல என கூறியுள்ளார்.

Friday, October 2, 2015

தமிழ், குஜராத்தியில் பிரதமர் அலுவலக இணையதளம்!

Friday, October 02, 2015
புதுடில்லி,: பிரதமர் அலுவலக இணையதளம், தமிழ், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் வடிவமைக்கப்பட உள்ளது. பிரதமர் அலுவலக இணையதளம் தற்போது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளது;

இதில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புகள், அவர் ஆற்றிய உரைகள், வெளிநாட்டு பயணம், முக்கிய சந்திப்புகள், புகைப்படங்கள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில், இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் சென்றடை யும் வகையில், தமிழ், குஜராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில்
வடிவமைக்கப்படஉள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில், மிக அதிக மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இணையதளம் என்ற பெயர், இதற்கு கிடைக்கும்.

இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடியின், 'மன் கீ பாத்' ரேடியோ உரை பற்றிய தொகுப்புகளை, புத்தகமாக வெளியிடவும், பிரதமர் அலுவலகம் திட்டமிட்டு உள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிரான மனு பிற்போடப்பட்டது!

Friday, October 02, 2015
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தடைசெய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பிரதமரின் உத்தரவுப்படி இயங்கும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் எனத் தெரிவித்து எல்லே குணவன்ச தேரர் மற்றும் கலாநிதி காலோ பொன்சேகா ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாயின் இன்று தெரிவிக்க முடியும் என்று மனுவின் பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பில் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டதரணி குறிப்பிட்டார்.

இந்நிலையில் மீண்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எதிர்வரும் 06ம் திகதி வரை காலஅவகாசம் வழங்குவதாக நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளது.

ஜெனிவா அறிக்கை தொடர்பில் விரைவில் கலந்துரையாடப்படும்: மைத்திரிபால!

Friday, October 02, 2015
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையினை செயல்படுத்துவதற்காக நாட்டின் அரசியலமைப்புப் படி உள்நாட்டு பொறிமுறை ஒன்று பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுவதற்காக விரைவில் அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளதாகவும் அவர் ரெிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட பின்னர் அமெரிக்காவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும் பேது எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் தௌிவுபடுத்துவதற்கு தான் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று வாழும் மக்களுக்கும் நாளை பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கும் நல்லது நடக்கும் விதமாகவும் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு சட்டத்தை மதித்து நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலையீடுகள் இன்றியும், சர்வதேச விசாரணை தொடர்பாக இருந்த தீர்மானத்தை அகற்றி உள்ளக பொறிமுறை மூலம் நாட்டின் அரசியலமைப்புப்படி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிடைத்திருப்பது பெரிய வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 
      

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள் சகிக்கமுடியாதது அவசியமற்றது: ஜிஎல்.பீரிஸ்!

Friday, October 02, 2015
இலங்கை அரசாங்கம் காணமற்போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள் சகிக்கமுடியாதது அவசியமற்றது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் காணமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை கலைக்குமாறு கோருவதன் மூலமும், இலங்கையின் நீதித்துறையில் மாற்றங்களை கோருவதன் மூலமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தனக்கும் வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறிவிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அலுவலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது இவ்வாறான விசாரணையை தனது முதற்தடவையாக அலுவலகம் மேற்கொண்டது புதுமையான விடயம் என குறிப்பிட்டிருந்தார்,அதன் மூலம் தனது அலுவலகம் ஆணையை மீறிவிட்டதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவு!

Friday, October 02, 2015
வாஷிங்டன் : பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தின் முக்கிய விநியோகஸ்தர். எந்த பிரச்னைக்கும் தீர்வு காண விரும்பினால் முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள்" என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுக்கூட்டத்தில் பேசிய பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா-பாக்., இடையே அமைதி நிலவ ஐ.நா., தலையிட வேண்டும்.போர் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அடிக்கடி தாக்குதல்கள் நடக்கின்றன. 1947 முதல் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது. பல தலைமுறைகளாக காஷ்மீரிகள் ஆக்கிரமிப்பு பகுதியிலேயே வசித்து வருகின்றனர் என இந்தியா மீது குற்றம்சுமத்தும் வகையில் பேசினார்.
 
ஷெரீப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தின் முக்கிய விநியோகஸ்தர். எந்த பிரச்னைக்கும் தீர்வு காண விரும்பினால் முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள். அண்டை நாடுகளை குற்றம் சுமத்துவதால் எதற்கும் தீர்வு ஏற்படாது. பயங்கரவாதிகளை உருவாக்குவதை முதலில் நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
 
நவாஸ் ஷெரீப் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கு காஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. பாக்., தனது அத்துமீறிய தாக்குதல் மற்றும் ஊடுருவலை நியாயப்படுத்த பார்க்கிறது. பாக்., சர்வதேச தளத்தை தவறாக பயன்படுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜான் கெர்ரியை, நவாஸ் சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸிடம், ஜான் கெர்ரி கண்டிப்புடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 1, 2015

ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கருத்துக்கு மெக்ஸ்வல் பரணகம அதிருப்தி!

UN High Commissioner for Human Rights Zeid Ra¿ad Al Hussein accused Colombo of creating "a wall of fear" to prevent witnesses giving evidence to a war crimes...
Thursday, October 01, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னின் கருத்துக்கு, காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதவான் மெக்ஸ்வல் பரணகம கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இதனால் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான ஓர் விசாரணைக் குழுவினை நிறுவ வேண்டுமென அல் ஹ_செய்ன் கோரியிருந்தார்.

எனினும், தமது ஆணைக்குழுவினை விடவும் வேறும் எவராலும் இந்தப் பணியை சிறப்பாக செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தமது ஆணைக்குழு பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் சாட்சியங்கள் திரட்டும் போது இராணுவத்தினரோ அல்லது காவல்துறையினரோ அந்த அறைகளில் இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் பல அமர்வுகள் நடத்தப்பட்டு 19000 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதில் 16000 பேர் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

300 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து அறிவிப்பு விடுத்தால் 1000 பேர் வருவதாகவும் எவரும் தமது ஆணைக்குழுவின் விசாரணைகளை நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமர்வுகள் மாலை வரையில் நடைபெற்றால் விசாரணைகளில் பங்கேற்போர் வீடு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளைக் கூட ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு தீர்வு வழங்க சில காலம் எடுக்கும் என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அவரிடம் நேரத்தை ஒதுக்கி அறிக்கை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது!


Thursday, October 01, 2015
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு எதிர்காலத்தில் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த அறிக்கை பற்றி நேற்று உறுப்பு நாடுகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கருத்து வெளியிடப்பட்டது.

இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லிணக்கத்திற்காக எடுத்துள்ள முயற்சிகளை தாம் வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மனிதவுரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள்  மற்றும் நிலைப்பாடுகள் அமெரிக்காவின் இறுதியறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதியின் சர்வதேச ஊடக மற்றும் ஆய்வுகள் பற்றிய ஆணையாளர் சுஹீஸ்வர பீ. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை மீறல் குறித்து விவாதம்; ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு!

 Thursday, October 01, 2015
ஜெனிவா: இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா, மனித உரிமைகள் ஆணையத்தில் துவங்கியது. இதில் சர்வதேச தலையீட்டை முந்தைய அரசு நிராகரித்தது எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையர் கூறினார்.
 
இலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், அந்த அமைப்பின் ஆணையர் ஜைத் ராத் அல் ஹூசைன் பேசுகையில், 
 
 பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தரவில்லை . கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை. இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச தலையீட்டை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்தது என கூறினார். மேலும் அவர் , பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படு
கிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இலங்கை உறுதி: 
 
 இலங்கை தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா பேசுகையில், அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும் உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறினார்.

ரஷ்யா கருத்து:
 
 ரஷ்ய பிரதிநிதி பேசுகையில், சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.

கொரியா ஆதரவு:
 
கொரிய பிரதிநிதி பேசுகையில், மீள் குடியேற்ற பணிகள் தொடர்பாக இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது இலங்கை அரசு எடுக்கும் முயற்சிக்கு கொரியா ஆதரவு அளிக்கப்படும் என கூறினார்.

இங்கிலாந்து கருத்து:
 
இங்கிலாந்து பிரதிநிதி பேசுகையில், ஐ.நா., விசாரணை அறிக்கை மட்டும் தீர்வாக அமையாது. இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம் என கூறினார்.

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் எப்போதுமே துணை நிற்கும் என ஜப்பான் பிரதிநிதி கூறினார்.

பிரான்ஸ் கண்காணிப்பு:
 
  கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி, மனித உரிமைகளை காக்க ஐநா பரிந்துரைகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.

பாகிஸ்தான் கருத்து:
 
பாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு உதவி வேண்டும். இலங்கை நடவடிக்கையை விமர்சிக்கும் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். எந்த மாதிரியான விசாரணை தேவை என்பதை முடிவு செய்ய இலங்கைக்கு உரிமை உண்டு என கூறினார்.
ஆஸ்திரேலியா கருத்து:
 
ஆஸ்திரேலிய பிரதிநிதி பேசுகையில், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா., அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என கூறினார்.
 
கனடா கருத்து:
 
 கனடா நாட்டு பிரதிநிதி பேசுகையில், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை காக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்போரை தண்டிக்க நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

சுவிஸ்கவலை: 
 
  சுவிட்சர்லாந்து பிரதிநிதி பேசுகையில். இலங்கை போரில் ராணுவம் மற்றும் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கூறினார்.

யுனிசெப் வலியுறுத்தல்:
 
போர் காணாமல் போ கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்களுக்கு உதவி தேவை. குழந்தைகளின் நிலை குறித்து இன்னும் பல குடும்பங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமைகள் விஷயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் ஆர்ப்பாட்டம்:
 
 இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில்  புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலங்காரா வார்த்தைகளை பயன்படுத்தி விசாரணை அமைப்பை மாற்ற வேண்டாம். சர்வதேச விசாரணை மட்டுமே தேவை என புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் கூறியுள்ளனர். பொது விவாதம்நடைபெற்று வரும்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட 11 கிராம சேவையாளர்கள் விடுதலை!

Thursday, October 01, 2015
புலிகள் அமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த 11 கிராம அலுவலர்களும் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். வவுனியா நகசைபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்னாயக்கா, மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 கிராம அலுவலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அவர்களை புனர்வாழ்வு பெறுமாறும் அதன்பின் தமது வேலைகளை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் ஊடாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
இதனடிப்படையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 11 கிராம அலுவலர்களும் தமது 3 மாத புனர்வாழ்வினை முடித்த நிலையில் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
இதேவேளை, புலிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம் சாட்டப்பட்டு புனர்வாழ்வு பெற்ற வேறு 9 இளைஞர், யுவதிகளும் புனர்வாழ்வு காலம் நிறைவடைந்த நிலையில் இவர்களுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க!

Thursday, October 01, 2015
ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.
 
போர்க்குற்றம் குறித்த ஐ.நா. அறிக்கை மீது இன்று ஜெனிவாவில் பொதுவிவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க,
 
அனைத்து மக்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மேலும் இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.