Monday, October 5, 2015

தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜேவிபி குற்றம்சுமத்தியுள்ளது!

Monday, October 05, 2015
தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜேவிபி குற்றம்சுமத்தியுள்ளது. பத்தரமுல்லை பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமை செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
 அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் உள்நாட்டு பிரச்சினையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது மக்களுக்கு செய்த பாரிய தவறாகும்.
 
தற்போதைய நிலைமையில், ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணையை நடத்தாமல் விடுவதானது, வெளியில் விசாரணையை கை நீட்டி அழைப்பதாக அமையும். அத்துடன் இது சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொண்டு மேற்குலக நாடுகளுக்கு தலையிட இடமளிப்பதாகவும் அமைந்து விடும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment