Sunday, October 4, 2015

மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனீவா அறிக்கை ஊடாக வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வழிபிறந்துள்ளது - தயான் ஜயதிலக!

Sunday, October 04, 2015
மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனீவா அறிக்கை ஊடாக வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வழிபிறந்துள்ளதாக சிரேஷ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக விமர்சித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்குற்றம் தொடர்பான பொறிமுறை காரணமாக சர்வதேச சக்திகளுக்கு இலங்கையில் நுழைவதற்கான வாயில் திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
 
சிங்கள இணையத்தளமொன்றுக்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,ஜெனீவா அறிக்கைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக இலங்கையின் நிலை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் இலங்கைக்குள் அந்நிய ஆதிக்க சக்திகளின் தலையீடு அதிகரிக்கும் என்றும் தயான் ஜயதிலக விமர்சனம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment