Saturday, October 03, 2015
எம்.வீ.சன்.சீ.கப்பலின் மூலம் கனடாவுக்கு
அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் வரையில் இந்த கப்பலில் கனடாவைச் சென்றடைந்தனர்.
இந்த கப்பலில் உள்ள அகதிகள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடினமான விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது
இரண்டு பேர் யுத்தக்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த நாட்டின்
குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment