Saturday, October 03, 2015
முழுமையான உள்ளக பொறிமுறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
இது இலங்கையின் அரசியல் யாப்பு ஏற்புடையதாகவே முன்னெடுக்கப்படும்" என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபை அமர்வில் கலந்து கொண்டுவிட்டு, நாடு திரும்பிய அவர் நேற்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
" அமெரிக்காவின் பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தை நீக்கியுள்ளோம்.
இந்த நிலையில், மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில், அனைத்து கட்சிகள், சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களில் தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
" மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார தடை விதிக்கப்படும் ஆபத்தும் காணப்பட்டது. அதற்கு முன் ஏற்பாடாக ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கம், ஐரோப்பியன் ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை போன்றன விதிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியமைத்து இந்த நிலைமையை மாற்றுவதற்கான பயணத்தை ஆரம்பித்தோம்.
அதன் முதற்படியாக 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி எனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் சிலவற்றை குறைத்தேன். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாத்தோம்.
காணாமல் போதல், கொலைகள், மோதல்கள், தாக்குதல்கள் இல்லாத ஜனாநாயத்துடனான நல்லாட்சியை உருவாக்கினோம். ஜனவரி 8 ஆம் திகதி இந்த புரட்சியினை உருவாக்கினோம். அதன்பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் திகதியின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் இணக்கப்பாட்டை நிறுவினோம்.
இதன்மூலம் சர்வதேச ஆதரவு கிடைத்தது. எமது நடவடிக்கையை சர்வதேசம் வரவேற்றது" எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment