Saturday, October 03, 2015
சென்னை: ஐ.நா., சபையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம்
நிறைவேறியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா,
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.,வின் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது.
தீர்மானம் ஓட்டெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேறியது
ஏமாற்றம், மன வருத்தம் அளிக்கிறது.
வலுவற்ற தீர்மானம் இலங்கை வாழ்
தமிழர்களுக்கு நன்மை பயக்காது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட
தீ்ரமானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும்
எடுக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விசாரணை, சர்வதேச
விசாரணைக்கு ஈடானதல்ல என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment