Wednesday, October 21, 2015
ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கையில்
நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கு தலையிடுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
ஜிஎல் பீரிஸ் மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வேண்டுகோள்கள் அடங்கிய கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் உட்பட பல மதத்தலைவர்களிற்கும் தான் அனுப்பிவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கியநாடுகளால் மனிதஉரிமை மீறல்கள் குறித்து வலியுறுத்தமாத்திரம் முடியும், நாடொன்று அரசியல்சீர்திருத்தங்களை முன்னெடுக்க செய்வதற்கான ஆணைஅதற்கு இல்லை அதுபோல அதனால் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது எனதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும்,இந்த தீர்மானங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்குமாறும் கோரி தான் மதத்தலைவர்களிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment